நயன்தாராவுக்கு பாடல் என்று கூறியதால் நடிக்க வராத அசின்!- ஏ. ஆர் முருகதாஸ் பகீர் பேட்டி

அசின் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன பின் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் கஜனி. இந்த படத்தை ஏ. ஆர் முகற்க தாஸ் இயக்கிருப்பார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார்.

மலையாள நடிகையான இவர் 2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அந்தணன் இது பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். கஜினி படத்திற்காக எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனில் ஒரு முறை இரவு நேரத்தில் சூட்டிங்கிற்காக அனுமதி வாங்கினார்களாம்.

நைட் 9 மணில இருந்து 2 மணிக்குள்ள சூட்டிங் எடுக்கணும். அது எப்படின்னா, மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தைகளை அசின் மீட்டு சென்னை எழும்பூர்ல வந்து இறங்குவது போன்ற காட்சி.

அன்று இரவு முருகதாஸ் அசின் உடன் உணவு அருந்தும் போது அடுத்த பாடல் சூட்டீங் எப்போது என்று கேட்டுள்ளார். அதற்கு முருக தாஸ் அது உங்களுக்கு இல்ல நயன்தாராவுக்கு தான் என்று கூறியுள்ளார்.

தை கூறியதும் அசினுக்கு கோபம் வந்து விட்டதாம். ஆனால் அதை எதாயும் கட்டி கொள்ளாமல் கேரவனுக்குள் சென்று விட்டார். அதன் பின் 2 மணி நேரம் ஆகியும் சூட்டீங் இற்கு வரவில்லையாம். பின் அவருடைய அசிஸ்டண்டை விட்டுக் கதவைத் தட்டுனதும் கதவை திறந்து எனக்கு வயிற்றுவலி. என்னால இப்ப நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம்.

முருகதாஸ் இற்கு கடும் கோபம் வந்து விட்டதாம். பின் சின் குழந்தைகளோட இறங்கி வர்ற மாதிரி மட்டும் எடுத்து சமாளித்து விட்டாராம். என்று வலைபேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

more news