போதையில் கெட்ட வார்த்தையால் பேசிய பாடகர் வேல்முருகன் கைது!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகர்களில், பாடகர் வேல்முருக்கனும் ஒருவர். இவர் ஒரு நாட்டுபுற பாடகர் ஆவார். மதுர குலுங்க, ஆடுங்கடா மற்றும் ஒத்த சொல்லால போன்ற பாடல்களை பாடி பிரபலமானார்.

இறுதியாக அசுரன் படத்தில் கத்திரி பூவழகி பாடலையும் பாடினார். இப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

விஜய் டிவியில் பிக்போஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பற்றினார். பிக்போஸ் நிகழ்ச்சிகக்கு பின்புதான் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர்.

பிரபலங்கள் என்றாலே பார்ட்டி வைப்பதும் குடித்து விட்டு போதையாவதும் வழமைதான்.

இவ்வாறு தான் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ஜெனனி இரவு குடித்து விட்டு கார் ஓட்டினார். அவர் பின் பொலிஸாரினால் கைது செய்யபட்டார். பின்னர் பிணையில் வெளியில் வந்துவிட்டார்.

இவ்வாறு தான் பாடகர் வேல்முருகனும் மது போதையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் கைது ஆகியிருக்கிறார். அப்போது அவர் மது போதையில் இருந்துள்ளார். அந்த அதிகாரி தற்போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சென்னை விருகம்பாக்கம் பக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. அப்போது வேல்முருகன் காரில் வேம்புலி அம்மன் கோயில் சிக்னல் சந்திப்பு அருகே சென்றபோது அங்கு மெட்ரோ ரயில் பணிக்காக இரும்பு தடுப்பு போடப்பட்டு அந்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்திருக்கிறது.

அங்கிருந்த பேரிகார்டை விலக்கி அந்த வழியாக வேல்முருகன் செல்ல, அதனை கவனித்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேலு என்பவர் வேல்முருககனை பார்த்து இந்த வழியாக எந்த வாகனங்களும் செல்லக் கூடாது என்று சொன்னபோது, அதற்கு அவரை கேட்டவார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார்.

வேல்முருகன் மீது பொலிஸாரிடம் புகர் கொடுக்க அவர்கள் வேல்முருகனை கைதுசெய்துள்ளனர். தற்போது அவர் பிணையில் விடுதலை ஆகியுள்ளார்.