மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணையும் தனுஷ்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். வித்தியாசமான கதை களத்தில் உருவான அசுரன்,கர்ணன் போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது ராயன் படத்தை இயக்கி நடித்து வருகின்றார். அடுத்த வெற்றிமாறன் இவர் தான் என்று கூறும் அளவிற்கு இயயாக்குனராக வளர்ந்து விட்டார்.

பொதுவாக ஏ. ஆர் ரகுமான் இசையமப்பதோடு நிறுத்தி விடுவாராம். படப்பிடிப்பு நிகழும் இடத்திற்கெல்லாம் செல்லமாட்டாராம். ஆனால் தனுஷின் ராயன் படபிடிப்பின் போது அங்கு ஏ. ஆர் ரகுமான் சென்று தனுஷின் இயக்கத்தை பார்த்து அவரை பாராட்டியுள்ளாராம்.

இவ்வாறு இருக்க தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளிவந்தது. இப்படம் 100 கோடி வசூல் செய்தது.

இவ்வாறு இருக்க தற்போது மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கை கோர்த்துள்ளார்.தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

இப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். மற்றும் இப் படத்தில் நாகார்ஜுனாவும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றார்.

இப் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.