முதியவரை தள்ளி விட்ட நாகர்ஜுனாவின் பாதுகாவலர்!-கண்டு கொள்ளாமல் சென்ற நாகர்ஜுனா,

நாகர்ஜூனா 1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேசுவர ராவ் மற்றும் அன்னபூர்ணா அக்கினேனியின் மகனாவார்.

தற்போது தனுஷின் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தில் நடித்து வருகின்றார். இவர் இப் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.

நடிகர் தனுஷ்,நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்து வரும் குபேரா படத்தின் படபிடிப்பு இம்மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இந்த படத்தின் படபிடிப்பு மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பிற்காக தனுஷ், நாகார்ஜுனா உள்ளிட்டவர்கள் ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் விமான நிலையத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த போது நாகார்ஜுனாவை தொட்டு பேச அவரது தீவிர மற்றும் வயதான ரசிகர் ஒருவர் முயன்றார். இதைப் பார்த்த அவரது பாதுகாவலர் அந்த வயதான நபரை சிறிதும் இரக்கமின்றி தள்ளி விட்டார். இதை பார்த்த க பார்த்தும் பாராமல் சென்றுள்ளார். அவருக்கு பின்னால் தனுஷ் மற்றும் அவருடைய மகன் இருவரும் வந்தனர். தனுஷும் கூட கண்டுகொள்ளாமல் சென்று விட்டார்.

இந்தா வீடியோ கானொளி வைரல் ஆகி வருகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் நீங்கள் என்ன கடவுளா? என்று கேட்டு வருகின்றனர்.

இந் நிலையில் நாகார்ஜுனா மன்னிப்பு கேட்டுள்ளார். இது போன்ற சம்பவம் நடந்திருக்க கூடாது. இதனால் நான் வயதான ரசிகரிடம் மன்னிப்பு கேட்கின்றேன். இனிமேல் இவ்வாறு நடக்காது. என்று கூறியுள்ளார்.