துருவ் விக்ரமுடன் இணையும் மாரிசெல்வராஜ்!-பட டைட்டில் ரொம்ப நல்ல இருக்கே

இயக்குனர் மாரிசெல்வராஜ் தந்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. மாரிசெல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படமே இவருக்கான ஒரு அடியாளத்தை பெற்று கொடுத்து விட்டது.

இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் இயக்குனராக விஸ்பரூபம் எடுத்தார். 2018 அம் ஆண்டு கதிர் நடிப்பில் வெளியான படம் தான் பரியேறும் பெருமாள். இப் படம் பல விருதுகளை பெற்றுள்ளது.

படம் வந்த கால கட்டத்தில் வட இந்தியாவில் நடைபெற்ற பிரபலமான விருது விழாவில் சிறந்த தமிழ் படமாக ‘பரியேறும் பெருமாள்’ படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்விருதை அஜித் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குனர் மாரி செல்வராஜுக்கு வழங்கினார்.

பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தையும் வடிவேல் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தையும் இவர் தான் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய மூன்று படங்களுமே பெரும் வரவேற்பை பெற்றது. இவ்வாறு இருக்க தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் படத்தை இவர்தான் இயக்கவுள்ளார். சீயான் விக்ரமின் மகன் தான் துருவ் விக்ரம்.

இவர் வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது இருவரும் இணைந்துள்ளனர். இவ்வாறு இருக்க படத்தின் டைட்டில் வெளியானது. இப் படத்திற்கு பைசன் காளமாடான் என பெயர் வைக்கபட்டுள்ளது.

ஒரு கபடி வீரனின் கதையை படமாக எடுக்கபடுகின்றது. இப் படத்தை பா. ரஞ்சித் தயாரிக்கின்றார். நிவாஸ் கே கிருஷ்ணா இசையமைக்கிறார்.

more news