75 ஆயிரம் சம்பளத்தை விட்டுட்டு போனேன் ஆன அட்லி எனக்கு 3500 தந்து ஏமாத்திடடாரு!- கதறிய பாண்டியன்

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் கவின். இவர் விஜய் டிவியின் பிக் போஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர். கவின் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது இவர் ஸ்டார் படத்தில் நடித்து வருகின்றார். இது வரும் மே 10 ம் திகதி வெளியாகவுள்ளது. இப் படம் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி அலையும் ஒருவரின் கதை. கவின் எப்படி ஸ்டார் ஆகிறார் , அவர் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார். என்பதே இக் கதையாகும். படத்தின் டிரெயிலர் வெளியானதும் ரசியாகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இப் படம் நிச்சயம் கவினின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக இருக்கும்.

இப் படத்தை இயக்கியவர்தான் இளன். இவர் 3 வருட போராட்டத்தின் பின் இயக்குனராகியுள்ளார். இவரின் தந்தை தான் பாண்டியன்.  

இவர் ஒரு வீடியோ போட்டோகிராபர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு புகைப்படங்கள் எடுப்பவர். இவருக்கும் நடிப்பின் மீது அதிக ஆர்வம் உண்டு. ஸ்டார் பட விழாவில் பேசிய அப்போது ஒரு திருமண வேலைக்காக 75 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று கூறி என்னை அழைத்தார்கள்.

ஆனால் ராஜா ராணி படம் உருவானபோது அட்லி என்னை நடிக்க அழைத்தார். அதனால் அங்கு போகாமல் படத்தில் நடிக்க போனேன். அட்லி எனக்கு 3000 ருபா சம்பளம் கொடுக்க சொன்னார் . சேர் நான் 75 ஆயிரம் ருபா சம்பளத்தை விட்டுட்டு வந்திருக்கேன் என்றதும் 500 கூட்டி 3500 ஆக கொடுக்க சொன்னார்.

அப்போது கசியரிடம் சொன்னபோது சேர் இப்போ உங்களுக்கு 3500 சம்பளமாக இருக்கலாம் ஆனால் இப் படம் வெளியானதும் ஒரு பூச்சியம் உங்க சம்பளத்துக்கு பின்னாடி கூடிடும் என்றார்.

இப்போது என்னோட மகன் இயக்குனராக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று கூறினர்.

more news