மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 14 ம் திகதி மகாராஜா படம் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தினை சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். நானும் ரௌடி தான் , விக்ரம் வேதா, சேதுபதி, இறைவி , 96 போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். பின்னர் குணநட்சத்திர பத்திரங்களிலும் மற்றும் வில்லனாகவும் நடித்து வந்தார்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்திருப்பார். மற்றும் விடுதலை படத்திலும் ஒரு நல்ல கேரக்டரில் நடித்திருப்பார். தற்போது விடுதலை 2 இலும் நடித்துள்ளார்.
பல முன்னணி நடிகர்களுக்கு எல்லாம் அவர்களுடைய 50 வது படம் வெற்றியை கொடுப்பதில்லை. ஆனால் விஜய் சேதுபதிக்கு இப் படம் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது.
படம் இதுவரை 85 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. முதல் நாள் மட்டும் 7 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் இவர் தனது சம்பளத்தை மேலும் உயர்த்தியுள்ளார்.