கருடன் திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் சூரியும் ஒருவர். காமெடியனாக அறிமுகமாகி இன்று கிரோவாக உயர்ந்து விட்டார். இவர் விடுதலை படத்தில் கிரோவாக அறிமுகமானார். தற்போது இவர் நடிப்பில் உருவான கருடன் படம் வெளியாகி உள்ளது.

சூரி சொக்கனாக தனக்கு சோறு போட்டு வளர்த்த நண்பன் கர்ணா(உன்னி முகுந்தன்) விஷ்வாசமுள்ளவராக இருக்கின்றார் சூரி.

கர்ணாவின் உயிர் நண்பன் ஆதி(சசிகுமார்), இவர்களும் நல்ல நட்பில் இருக்க, ஆனால், இவர்களுக்கு என்று இருக்கும் கோவில் மூலம் ஒரு அரசியல்வாதிக்கு பல கோடி கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

இதனால் கர்ணாவிற்கு ஆசை காட்டி, ஆதியை கொல்லும் நிலைக்கு வர, இந்த உண்மையெல்லாம் தெரிந்த சொக்கன் யார் பக்கம் நின்றார் என்பதே கதை.

அந்த அமைச்சரின் அடியாளான மைம் கோபி கொம்பைக்கு வந்து கருணாவிடம் டீல் பேசுகிறார். ஆதியை ஏமாற்றி கோவில் நிலத்தை தங்களுக்கு கொடுத்தால் பணம் கிடைக்கும் என கருணாவிடம் கூறுகிறார். மனைவியின் தூண்டுதலால் ஆதிக்கு துரோகம் செய்ய முடிவு செய்கிறார் கருணா.

நண்பன் செய்த துரோகம் பற்றி தெரியாமல் இருக்கும் ஆதி கொலை செய்யப்படுகிறார். அதை சொக்கன் பார்க்கிறார். இதற்கு பின் சொக்கன் என்ன செய்கின்றார் என்பது தான் மீதி கதை.

படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாகவே உள்ளது என்று கூறி வருகின்றனர். இது வரைக்கும் படத்திற்கு எதிர் மறையான விமர்சனங்கள் எதுவும் வரவில்லை. எப்படியும் இப் படம் வசூல் வேட்டை ஆடும் என்பதில் சந்தேகம் இல்லை.

more news