கவினுடன் இணையும் அந்த நம்பர் 1 நடிகை யார் தெரியுமா?

வளர்ந்து வரும் நடிக்கர்களில் கவினும் ஒருவர். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் இவருக்கு வெற்றியை அள்ளி கொடுத்து கொண்டே இருக்கின்றன. இவர் நடித்த லிப்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து டாடா படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் ஹிட் அடித்தது.

இவர் இறுதியாக நடித்த ஸ்டார் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் இவருக்கு பல படவாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. இந்தா படமும் இவரை உயரத்திதான் விட்டது. கிஸ் திரைப்படம், நெல்சன் தயாரிப்பில் வெளியாகும் பிளடி பெக்கர் திரைப்படம், மாஸ்க் திரைப்படம் என வரிசையாக நிறைய படங்களில் நடித்து வருகின்றார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். நாயகிகளில் அதிக சம்பளம் வாங்கும் பெண் இவர்தான். இவர் ஒரு படத்திற்கு பத்து தொடக்கம் பதினொரு கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார்.

திருமணத்திற்கு பின் இவர் பெரிய படவாய்ப்புகளை நழுவ விட்டு விட்டார். இவரின் இடத்தில் தற்போது திரிஷா வந்து விட்டார். திருமணம் ஆன பின்பு நாயகியாக நடிக்கும் நடிகையும் இவரே இருபினும் இவருக்கான மார்க்கெட் குறைந்து வருவதும் உண்மையே.

சமீபத்தில் நடிகர் யாஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு அக்காவாக நயன் நடிக்க ஒத்து கொண்டதாகவும் அதற்கு 20 கோடி சம்பளம் கேட்டதாகவும் கூறபடுகின்றது. பின்னர் அவர் மறுத்து விட்டார் என்றும் தகவல் வெளியானது.

இவ்வரு இருக்க விஷ்ணு எடவன் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கப் போகும் படத்தில் கவின் கமிட் ஆகிவிட்டார்.  இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் உத்தியோக பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.