பிறந்த நாள் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி கடிதம்
சென்னை,
19.12.2023
அன்புள்ள மாமா,
வணக்கம். நானும் அம்மாவும், அப்பாவும் இங்கு நலமாக இருக்கின்றோம். உங்களது நலத்தையும் அத்தையின் நலத்தையும், தங்கை விமலாவின் நலத்தையும் அறிய ஆவலாக உள்ளேன். நான் நன்றாக படித்து இறுதியாக நடைபெற்ற தேர்வில் சிறந்த மதிப்பென்களை பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தங்களிடம் அறியத்தருகின்றேன்.
நீங்கள் என் மீது கொண்ட அன்பினால் அனுப்பிய பிறந்த நாள் பரிசினை நான் பெற்றுக் கொண்டேன். நீங்கள் அனுப்பிய பரிசு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் தினமும் பள்ளிக்கு நீங்கள் பரிசளித்த மிதி வண்டியிலேயே பயணிக்கின்றேன். மிதி வண்டியில் பயணிப்பதானது எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. தாங்கள் அனுப்பிய பிறந்த நாள் பரிசிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இப்படிக்கு,
அன்புள்ள மருமகள்,
வே. கண்மணி
உறைமேல் முகவரி
பெறுநர்:
க. விஸ்வ குமார்
14, பாரதி தெரு,
மதுரை.
You May Also Like: