யோகா பற்றிய கட்டுரை

yoga katturai in tamil

யோகா என்பது இந்தியத் தத்துவத்தில் வேரூன்றிய ஒரு பழமையான மற்றும் சிக்கலான பயிற்சி முறையாகும். இது ஆரம்பத்தில் ஆன்மீக நடைமுறையாகத் தொடங்கியது. ஆனால் தற்போது உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகப் பிரபலமாகிவிட்டது.

யோகா பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

 • முன்னுரை
 • யோகா என்பது
 • யோகாவின் வகைகள்
 • யோகாவின் நன்மைகள்
 • நவீன யோகா
 • சவால்கள்
 • முடிவுரை

முன்னுரை

யோகாவைப் பற்றி முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது விழிப்புணர்வு மக்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது.

மனித பாரம்பரியத்தின் இந்த உண்மையான பொக்கிசத்தை அங்கீகரித்த ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21னை சர்வதேச யோகா தினமாக நினைவுகூரும் ஒரு தீர்மானத்தை 2014 டிசம்பரில் ஏற்றுக் கொண்டது.

யோகாவின் முக்கியத்துவம் உணர்ச் செய்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் வகிபங்கு இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தலையாய பணியாக இருந்ததை காணமுடிந்தது.

யோகா என்பது

யோகா என்பது மிகவும் நுட்பமான அறிவியலைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக ஒழுக்கமாகும். இது மனதுக்கும் உடலுக்குமிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஒரு கலை யோகா ஆகும்.

யோகாவின் வகைகள்

அஷ்டாங்க யோகா, பிக்ரம் யோகா, ஹத யோகா, ஐயங்கார் யோகா, கிருபாலு யோகா, குண்டலினி யோகா, சக்தி யோகா, சிவானந்தா, வினியோகம், யின் யோகா, மகப்பேற்றுக்கு முற்பட்ட யோகா, மறுசீரமைப்பு யோகா எனப் பல வகைகள் உண்டு.

யோகாவின் நன்மைகள்

 • தசைகளில் வலிமையை உருவாக்குகின்றது.
 • நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகின்றது
 • இதய ஆரோக்கியத்தை ஏற்படுத்துகின்றது.
 • மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, மனக்கவலை ஆகியவற்றைக் குறைக்கின்றது.
 • தூக்கத்தை மேம்படுத்துகின்றது.
 • ஒட்டுமொத்த நல்வாழ்வையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகின்றது.
 • அதிக உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.
 • புகைப்பிடித்தல் பழக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.

நவீன யோகா

யோகாவானது பழங்கால நடைமுறையாகக் காணப்பட்ட நடைமுறையாகக் காணப்பட்ட போதிலும் காலப்போக்கில் அது பல புதிய விடயங்களை உள்வாங்கி வளர்ச்சியடைந்து வருகின்றது.

நவீன யோகாவானது உள் அமைதி மற்றும் உடல் ஆற்றலைத் தூண்டுவதற்கான விடயங்களில் கவனம் செலுத்துகின்றது.

பழங்கால யோகாவானது உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை மாறாக அது மன ஆரோக்கியத்தை வளர்ப்பதிலும், ஆன்மீக ஆற்றலை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தியது.

சவால்கள்

பல வகையான யோகாக்கள் ஒப்பீட்டளவில் சுலபமானவை. எனவே நன்கு பயிற்றுவிப்பாளர் பயிற்சியை வழிநடத்தும் போது இது பாதுகாப்பானதாகும். எனினும் முறையான பயிற்றுவிப்பாளர் இல்லையெனில் அது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.

கர்ப்பமாக இருப்பவர்கள் மற்றும் எலும்புத் தேய்மானம் உள்ளவர்கள் உட்பட பிற மேசமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் யோகாப் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் வைத்திய ஆலோசனை முக்கியமாகும்.

முடிவுரை

இன்றைய அவசர உலகில் யோகா பயிற்சி என்பது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

நமது வாழ்க்கையில் அமைதியையும், உடலில் ஆரோக்கியத்தையும் பேணுவதற்கு யோகா உறுதுணையாக அமையும் என்பதனை பல ஆய்வின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

முறையான யோகாப் பயிற்சியினை அனைவரும் கற்றுக் கொள்வதன் மூலம் மன அமைதியுடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம் என்பதில் ஐயமில்லை.

You May Also Like:

வாசித்தேன் வளர்ந்தேன் கட்டுரை

எங்கள் ஊர் கோவை கட்டுரை