எங்கள் ஊர் கோவை கட்டுரை

engal oor kovai katturai in tamil

உலகம் எவ்வாறு நவீனமயமாகி கொண்டு சென்றாலும் கூட, உலகில் எத்தனையோ நாடுகள் பல்வேறு விதமான புதிய வளர்ச்சியை எட்டினாலும் கூட சொந்த ஊரின் மகிமையை வேறு எங்கும் கண்டு கொள்ள முடியாது.

உலகில் எப்பகுதியிலும், எவ்வாறான ஆடம்பரங்களுடனும் வசித்தாலும் சொந்த ஊரில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறெங்கும் கிடைப்பது ஐயத்துக்குரியதாகும். இதன் அடிப்படையில் எங்கள் ஊர் கோவை எங்களுக்கு எப்பொழுதும் சிறப்பானது ஆகும்.

எங்கள் ஊர் கோவை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • புவியியல் அமைவிடம்
  • கோவையின் வரலாறு
  • சுற்றுலாத் தளங்கள்
  • தொழில்கள்
  • முடிவுரை

முன்னுரை

கொங்கு நாட்டின் தலைநகரம் என சிறப்பித்துக் கூறப்படும் ஒன்றே கோயம்புத்தூர் நகராகும். இது கோவை எனவும் அழைக்கப்படுகின்றது.

இந்த பெயருக்கான காரணம் சங்க காலத்தில் கோசர் குலத்தவர்கள் இப்பகுதியில் வாழ்ந்தமையினால் கோசர்புத்தூர்-கோசம்புத்தூர்-கோயம்புத்தூர் என பெயர் வந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. இக்கட்டுரையில் எங்கள் ஊரான கோவை பற்றி அறிந்து கொள்ளலாம்.

புவியியல் அமைவிடம்

இந்திய நாட்டின் தமிழகத்தின் மேற்குப் பகுதியிலேயே கோவை பிரதேசம் அமைந்துள்ளது. அதாவது கேரள மாநிலத்தை அண்மித்த ஒரு பகுதியாகவே இந்த கோவை காணப்படுகின்றது.

இதன் வடக்குப் பகுதியில் நீலகிரி, பல்லூர் வளையமும், பாதுகாப்பு காடுகளும், தெற்கே பழனியும் காணப்படுகின்றது, கிழக்குப் பகுதியில் வறண்ட நிலம், கொல்லிமலை காணப்படுவதோடு, மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும், பாலக்காட்டு கணவாயும் காணப்படுகின்றது.

ஆகையினால் இந்த கோவை பகுதியில் பல்வேறு மிருகங்களும், பறவைகளும், பூங்காக்களும், ஏரிகளும், குளங்களும் காணப்படுவதனை அவதானிக்கலாம்.

கோவையின் வரலாறு

கி.பி. 3 நூற்றாண்டு தொடக்கம் 9 நூற்றாண்டு வரை கொங்கு மண்டலத்தை கன்னடம் பேசும் கங்க மன்னர்களே ஆட்சி செய்தனர். இந்த கொங்கு மண்டலத்துக்குள் கோவையும் காணப்பட்டது. பின்னர் சோழர்கள், பாண்டியர்கள் என ஆட்சி கைமாறி நடத்தப்பட்டது.

வரலாற்று ஆதாரங்கள் படி 18 நூற்றாண்டின் பாதிவரை மைசூர் அரசர்களின் கைகளில் காணப்பட்ட கோவை ஆங்கிலேயர்களினால் கைப்பற்றப்பட்டது. 1799 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கோவை முழுவதையும் கைப்பற்றி அங்கு பல்வேறு சீர்திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் 1856ல் கோவையில் இருந்து சென்னை, மேட்டுப்பாளையம், ஈரோடு போன்றவற்றுக்கு பாதைகளும் நிர்மாணிக்கப்பட்டன.

கோவை நகரிலே நிர்வகிப்பதற்காக 1865ம் ஆண்டு நகர சபை அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலம் அதே மாநகராட்சி சபையாக உயர்ந்துள்ளமையைக் காணலாம்.

சுற்றுலாத் தளங்கள்

கோவை பிரதேசத்தில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்ற போதிலும், சில சுற்றுலாத் தளங்கள் பற்றி மக்கள் அறிமுகமில்லாதவர்களாகவே காணப்படுகின்றனர்.

கோவை பிரதேசத்தில் சுமார் 26 சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. இவற்றுள் மருதமலை மலை கோவில், வைதேகி நீர்வீழ்ச்சி, வெள்ளையங்கிரி மலை, வெள்ளையங்கிரி சிவன் கோவில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, சிறுவாணி நீர்வீழ்ச்சி, சிறுவாணி அணைக்கட்டு, சுப்பிரமணியர் கோவில், குரங்கு நீர்வீழ்ச்சி, நேரு பூங்கா மற்றும் கீடி கார் அருங்காட்சியகம் போன்றவாறான சில சுற்றுலா தளங்களை நாம் இங்கு சுட்டிக் காட்ட முடியும்.

தொழில்கள்

கோவை பிரதேசத்தில் வசிக்கக் கூடிய மக்கள் செய்யக்கூடிய தொழில்களாக நாம் பின்வருவனவற்றை அடையாளப்படுத்த முடியும்.

கோவை பிரதேசத்தில் தரமான பருத்தி மற்றும் ஜவுளி பெரிய அளவில் உற்பத்தி செய்தயப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றமை பிரதானமானதாக காணப்படுகின்றது.

மேலும் தண்ணீர் பம்ப் உற்பத்தி மற்றும் மென்பொருள் உற்பத்தி என்பவற்றிலும் கோவைப் பிரதேசம் சிறந்து விளங்குவதனைக் காணலாம்.

அத்தோடு சுற்றுலா தளங்கள் காணப்படுகின்றமையால் வியாபாரம், வணிகம் மற்றும் சிறு கைத்தொழில் உற்பத்தி, குடிசைத் தொழில் போன்றனவும் இங்கு இடம் பெறுவதனை நாம் குறிப்பிட முடியும்.

முடிவுரை

பரந்து விரிந்த எழில் கொஞ்சும் ஒரு நகராக இந்த கோவை காணப்படுகின்றமையானது அதன் இயற்கை அழகையும் அப்ரதேசத்தில் காணப்படக்கூடிய வளங்களையும் பறைசாற்றுவதாக காணப்படுகின்றது.

எங்களுடைய ஊரான கோவையின் அமைவிடம் புவியியல் சிறப்பு சுற்றுலா தளங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்வதன் மூலமாக எங்கள் ஊர் கோவை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பிரதேசம் என்பதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

You May Also Like:

எங்கள் ஊர் சென்னை கட்டுரை

கனவு மெய்ப்பட வேண்டும் கட்டுரை