எங்கள் ஊர் சென்னை கட்டுரை

engal oor chennai katturai in tamil

தமிழ் நாட்டின் தலைநகராகவும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாகவும் திகழ்வதே சென்னையாகும். எங்கள் ஊர் சென்னையானது இன்று பல்வேறு வளர்ச்சிகளை தன்னகத்தே கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றது.

தென்னிந்தியாவின் வாசலாகவும் எங்கள் ஊர் சென்னையே அமைந்துள்ளமை சிறப்பிற்குரியதாகும்.

எங்கள் ஊர் சென்னை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பெயர்க்கான காரணம்
  • கலாச்சாரம்
  • தொழில்கள்
  • சிறப்புமிகு இடங்களை கொண்டமைந்த எங்கள் ஊர்
  • முடிவுரை

முன்னுரை

எங்கள் ஊர் சென்னையானது பொருளாதாரத்திலும் தொழிநுட்பத்திலும் மாபெரும் வளர்ச்சியினை கண்டுவரும் ஊராகும். அந்த வகையில் தொழிநுட்பதுறையில் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது.

மேலும் தமிழ் திரைப்படத்தின் தாயகமாகவும் காணப்படுகின்றதோடு எங்கள் ஊரானது மதராசு பட்டினம், மெட்ராஸ், சென்னை பட்டினம் எனவும் சிலரால் அழைக்கப்படுகின்றது.

பெயர்க்கான காரணம்

எங்கள் ஊரானது 1956ம் காலப்பகுதியில் போத்துகீசரால் மதராஸ் என பெயர் வைக்கப்பட்டு அழைக்கப்பட்டது.

பிரித்தானியரின் வருகையின் பின் சென்னை ஜார்ஜ் என்ற கோட்டை நிலத்தை பிரித்தானியரே கைப்பற்றியதால் அவரது தந்தையின் பெயரான சென்னப்ப நாயக்கர் என்ற பெயரால் சென்னை பட்டணம் என அழைக்கப்பட்டது. பின்னரே இப்பெயரானது மருவி சென்னை என அழைக்கப்படுகின்றது.

கலாச்சாரம்

எங்கள் ஊர் காலச்சாரமானது பலதரபட்ட மக்களின் பிரதிபலிப்பை கொண்டே காணப்படுகின்றது. அதாவது பாரம்பரியமும், நவீனமும் கலந்து காணப்படுகின்ற காலாச்சாரமாகவே எங்கள் ஊரினது காலச்சாரம் திகழ்கின்றது.

அந்த வகையில் எங்களது ஊரில் வருடந்தோரும் டிசம்பர் மாதத்தில் இசைத்திருவிழாவானது கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தகைய சந்தர்ப்பத்தில் பல நாடுகளை சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியம் மற்றும் பல பாரம்பரிய கலைகளை பயின்று செல்கின்றனர்.

அதே போன்று தமிழ் திரைப்படத்துறைக்கு வித்திடக்கூடியதாகவும் அமைந்துள்ளது. மேலும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் சென்னை சென்றல் ரயில் நிலையம் போன்றவற்றில் ஆங்கிலேயரின் பாதிப்பால் உருவான கட்டிடங்களை காணக்கூடியதாக எங்கள் ஊர் காலச்சாரமானது காணப்படுகின்றது.

தொழில்கள்

எங்கள் ஊரானது பொருளாதார ரீதியில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுவரும் ஊராகும் என்ற வகையில் தகவல் தொழிநுட்ப நகரமாக திகழ்வது சிறப்பிற்குரியதாகும்.

மேலும் வாகன உற்பத்தி, ஊர்தி, வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் என பல்வேறு தொழில்களின் மையமாகவே எங்கள் ஊர் சென்னை திகழ்கின்றது.

தெற்காசியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக எங்கள் ஊர் காணப்படுவதோடு அழகான கடற்கரையையும் கொண்ட ஒரு வணிக நகரமாகவும் காணப்படுகின்றது. அதேபோன்று பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளும் எங்கள் ஊரில் இடம்பெறுகின்றமை சிறப்பானதாகும்.

சிறப்புமிகு இடங்களை கொண்டமைந்த எங்கள் ஊர்

எங்கள் ஊர் சென்னையானது பல்வேறு சிறப்பு வாய்ந்த இடங்கள் கொண்டமைந்ததாக காணப்படுகின்றது.

அதாவது மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரை, அருங்காட்சியகம், பிர்லா கோளரங்கம், தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் என பலவாறு காணப்படுகின்றது.

உலகில் இரண்டாவது நீளமான கடற்கரையாக மெரினா கடற்கரை காணப்படுவதோடு ஓர் எழில்மிகு கடற்கரையாகவும் பல இன மக்களை ஒன்று சேர்க்கும் சிறப்பு வாய்ந்ததொரு ஊராகவும் எங்கள் ஊர் திகழ்கின்றது.

முடிவுரை

எங்கள் ஊர் சென்னையானது மக்கள் ஒற்றுமையினை பேணும் ஒரு நகராகவே திகழ்கின்றது. அந்த வகையில் எங்கள் பெருமைகளை நன்கு உணர்ந்து எமது ஊரின் வளர்ச்சிக்கு வித்திடக்கூடியவர்களாக காணப்படுவது எங்கள் அனைவரதும் கடமையாகும்.

You May Also Like:

தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம்

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்