கோட் பட படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடை பெற்று கொண்டிருக்கின்றன.
கோட் படபிடிப்பிற்காக வெளிநாடு சென்ற விஜய் தேர்தல் நடைபெற்ற அன்று இந்தியா வந்து அவருடைய வாக்கை பதிவிட்டிருந்தார்.
இவருடைய 68 வது படமான கோட் படம் வருகின்ற செப்டெம்பர் 5ம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடை பெற்று கொண்டிருக்கின்றன.
இந் நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்துவதற்கு படக்குழு முன்புறமாக வேலை செய்துகொண்டுள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
விஜய் மீண்டும் படபிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார். நேற்று படபிடிப்பிற்காக அமெரிக்க சென்றுள்ளார். அப்போது இவரின் ரசிகை ஒருவர் அவருடைய சகோதரியை வழியனுப்புவாதற்காக விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு விஜய்யை பார்த்ததும் அண்ணா என்று கூப்பிட்டிருக்கின்றார், ஆனால் விஜய் அவரை கண்டுகொள்ளாமல் சென்று விட்டார் என்று வருத்தத்தில் போட்டி அளித்துள்ளார்.
ஆனால் விஜய் ரசிகர்கள் விஜய்க்கும் அவருக்கும் இடையில் கண்ணாடி யன்னல் இருந்ததாகவும் அதனால் இவர் கூப்பிட்டது கேட்கவில்லை எனவும் கூறி வருகின்றனர்.
விஜய் ரசிகர் ஒருவர் அவருக்கு கை கொடுக்க அவரும் கை கொடுத்துவிட்டு அலப்பறை இல்லாமைல் செல்லும் காட்சிகள் பரவி வருகின்றன.