பிரேம்ஜி கங்கை அமரன் என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரரும் ஆவார்.
இவருக்கு எப்போது திருமணம் என்று அனைவரும் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு இருக்க இவருடைய திருமண பத்திரிகை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
பிரேம்ஜியின் திருமணம் நாளை திருத்தணியில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் இந்த திருமணத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடத்தலாம் என அவரது குடும்பத்தினர் நினைத்திருந்தனர்.
திடீரென அவருடைய திருமண பத்திரிக்கை ஒன்று இணையதளத்திலும் வைரலானது. இதைப்பற்றி வந்த வெங்கட் பிரபு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ‘குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டு இந்த திருமணத்தை நடத்தலாம் என முடிவெடுத்திருந்தோம்.
ஆனால் எனது நண்பர் ஒருவர் திடீரென இந்த திருமண பத்திரிகையை வெளியிட்டு விட்டார். மற்றும் மணமகள் சினிமாதுறையை சார்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் அது உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு இருக்க பிரேம்ஜியின் காதலி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்து வங்கி ஊழியராக பணியாற்றி வருகின்றார். சில ஆண்டுகளாக பழகிவந்த இவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இருவரில் இந்துதான் முதலில் பிரேம்ஜியிடம் காதலைச் சொன்னாராம்.
இந்து தொடர்ந்து பிரேம்ஜியை விரட்டி விரட்டி காதலித்து வந்தாராம். அதன் பின்னர்தான் இந்துவின் காதலுக்கு பிரேம்ஜி க்ரீன் சிக்னல் காட்டி, அதனை பெற்றோர்களிடம் தெரிவித்து சம்மதம் பெற்று தற்போது திருமணத்திற்கு வந்துள்ளது.
வெங்கட் பிரபு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஆசிர்வதிக்குமாறும் கூறியுள்ளார்.