சூர்யா, ஜோதிகா பிரிந்து விட்டனரா?-பயில்வனுக்கு பதிலடி கொடுத்த ஜோதிகா

சினிமாவில் பெஸ்ட் ஜோடி யார் என்று கேட்டால் அஜித், ஷாலினி மற்றும் சூர்யா, ஜோதிகா தான் இவ்வாறு இருக்க சூர்யா, ஜோதிகா இருவரும் பிரிந்து விட்டனர் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவிவருகின்றது.

சூர்யா, ஜோதிகா இருவரும் 2007ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தேவ் என்ற ஆண் மகனும் தியா என்கின்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

சமீபத்தில் ஜோதிகா மும்பையில் வீடு வாங்கி உள்ளார். ஆனால் சூர்யா சென்னையில் தான் வசித்துவருகின்றார். இதனால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என சிலர் பேசி வருகின்றனர்.

ஜோதிகா திருமணத்திற்கு பின்பு சினிமாவில் இருந்து விலகி விட்டார். தற்போது மீண்டும் சினிமாவிற்குள் காலடிவைத்துள்ளார்.

ஜோதிகா தனது உடல் எடையை 15 கிலோவினால் குறைத்துள்ளார். சூர்யா,ஜோதிகா இருவரும் சேர்ந்து உடல் பயிற்சி செய்யும் காணொளிகள் இணையத்தில் வைரல்ஆகி வருகின்றன.

சூர்யா,ஜோதிகா இருவரும் சேர்ந்து படம் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இவ்வாறு இருக்க பயில்வான் ரங்கநாதன் சூர்யா,ஜோதிகாஇருவரும் பிரிந்து வாழ்கின்றனர் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு ஊடகத்துக்கு ஜோதிகா அளித்த பேட்டியில், “நானும், சூர்யாவும் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்துவருகிறோம்.

நாங்கள் பிரிந்துவிட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன. பொய்யான விஷயத்தை பரப்புவது தவறான செயல்.

கங்குவா படத்துக்காகத்தான் சூர்யா ஒரே ஹேர் ஸ்டைலில் இருந்துவருகிறார். அது எனக்கு பிடிக்கவில்லை. அவர் எப்போது முடி வெட்டுவார் என்று காத்துக்கொண்டிருக்கிறேன். என்று பதிலளித்துள்ளார்.

more news