ஒரே படத்திற்கு போட்டி போடும்  த்ரிஷா, நயன்தாரா, ராஷ்மிகா!-யாருக்கு அந்த வாய்ப்பு?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிக்கைகளாக வலம் வருபவர்கள்  த்ரிஷா, நயன்தாரா, ராஷ்மிகா ஆகிய மூவருமே.

இதில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயன்தாரா மட்டுமே. இவர் ஒரு படத்திற்கு பத்து தொடக்கம் பதினைந்து கோடி வரை வாங்குகின்றார்.

நயன்தாராவிற்கு திருமணமானதும் அவருக்கான மார்க்கெட் சற்று தளர்ந்து விட்டது. இவ்வாறு இருக்க சினிமாவில் இருந்து காணாமல் போன திரிஷா மீண்டும் ரீ என்றி கொடுத்து பீக்க்கு வந்து விட்டார்.

திரிஷா கமலின் தக் லைப் படத்தில் நடிப்பதற்கு பன்னிரெண்டு கோடி சம்பளம் வாங்கியுள்ளார். லியோ படத்திற்கு திரிஷா ஐந்து கோடி தான் சம்பளம் வாங்கியுள்ளார்.

ராஸ்மிகா ஒரு படத்திற்கு 4 கோடி சம்பளம் வாங்குகின்றார்.

இவ்வாறு இருக்க பிரபல கர்நாடக சங்கீத மேதை ஒருவரின் பயோபிக் திரைப்படத்தில் நயன்தாரா, த்ரிஷா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர்களில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடக சங்கீத மேதை மற்றும் பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக கூறப்படுகின்றது.

எம்எஸ் சுப்புலட்சுமி கேரக்டரில் நடிக்க நயன்தாரா, த்ரிஷா ஆகிய இருவரிடமும் கதை சொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் பெயரும் லிஸ்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

more news