சம்பவம் செய்யும் அரண்மனை 4!-இத்தனை கோடி வசூலா?

அரண்மனை 4 சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே 3 ம் திகதி வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருப்பினும் இன்றுவரைக்கும் படம் ஓடிக்கொண்டே இருக்கின்றது.

அரண்மனை 3 வெளியானதும் படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை, இத்தோடு நிறுத்திவிடுங்கள் என்று சுந்தர் சியை கலாய்த்து வந்தனர். பலர் அரண்மனை படத்தோடு நிறுத்தியிருந்தால் அதற்கான மதிப்பாவது கிடைத்திருக்கும் என்று கூறிவருகின்றனர்.

இவ்வாறு இருக்க மே 3 ம் திகதி அரண்மனை 4 வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இப் படம் ஒரு குடும்ப படமாக அமைந்துள்ளது.

வெளியான இரண்டு வாரங்களிலே உலகளவில் 73.5(இந்தியா ரூபாயில் )  கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழ் நாட்டில் மட்டும் 51 (இந்தியா ரூபாயில்) கோடி வசூல் செய்துள்ளது.

இப்போது 3 வாரங்கள் கடந்த நிலையில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அது மட்டுமல்லாது 2024 ஆம் ஆண்டு இது வரை வெளியான படங்களில் அதிக வசூலை பெற்ற படம் இதுதான்.

more news