கோட் படத்தில் நடித்தது விஜய்யே இல்லையா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். இவர் கோட் படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

இவ்வாறு இருக்க இப் படம் வரும் செப்டெம்பர் 5 ம் திகதி வெளியாகவுள்ளது. செப்டெம்பர் 5 திகதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப் படம் வெளியாகவுள்ளது.

இப் படத்தின் விசில் போடு பாடல் வெளியானதில் இருந்தே பல சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன. அப் பாடல் மது பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் இருந்துள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந் நிலையில் புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோட் படத்தில் விஜய் நடிக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக  டூப் போட்டு ஆர்டிஸ்ட்களை வைத்து எடுத்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகின்றது.

விசில் போடு பாடல் மட்டும் தான் இவர் நடனம் ஆடினாராம். மாஸ்க் போட்டு டான்ஸ் ஆடுகிற மாதிரி ஒரு பாடல் இருக்கிறது. அந்த பாடல் விஜய் ஆடவில்லையாம். இது மட்டுமல்ல சண்டை காட்சிகள் கூட ஆர்டிஸ்ட்களை வைத்து தான் வெங்கட் பிரபு எடுத்துள்ளார்.

முக்கியமாக விஜய்யின் படத்தை அனைவரும் விரும்பி பார்பதற்கு முக்கிய காரணம் அவரின் நடனம் மற்றும் அவரின் சண்டை காட்சி. இது இரண்டையும் விஜய் நடிக்காமல் ஆர்டிஸ்ட்களை வைத்த எடுத்தால் படத்தின் நிலைமை என்னவாக இருக்கும்.

இதற்கு அனைத்திற்கும் முழு காரணமும் விஜய்யின் அரசியல் வருகைதான். அவர் அரசியல் பற்றி சிந்திபதால் தான் படத்தில் அவருடைய கவனம் இல்லை. இதில் இருந்து இவர் ரசிகர்களுக்கு உண்மையாக இல்லை என்று தெரிகின்றது.

more news