சுதந்திர இந்தியா கட்டுரை

suthanthira india katturai in tamil

இன்று எமது இந்திய தேசமானது பல இன்னல்களையும், தடைகளையும் தாண்டி சுதந்திரம் பெற்று காணப்படுகின்றது. எமது இந்திய தேசத்தின் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்ற நாம் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடக்கூடியவர்களாக திகழ வேண்டும்.

சுதந்திர இந்தியா கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இந்தியாவின் பெருமை
  • சுதந்திர இந்தியாவில் கல்வியின் பங்கு
  • இந்தியாவின் சாதனைகள்
  • சுதந்திர இந்தியாவை காப்பதில் இளைஞர்கள்
  • முடிவுரை

முன்னுரை

சுதந்திர இந்தியா என்ற சொல்லிற்கு பின்னால் பல்வேறு தியாகிகளின் தியாகம் காணப்படுகின்றது. இன்று சுதந்திர இந்தியாவாக எமது தேசம் மிளிர்வதற்கான காரணம் பல வீரர்களின் செயற்பாடுகளே ஆகும். இத்தகைய இந்திய நாட்டின் சுதந்திரத்தை காப்பது அனைவருடையதும் கடமையாகும்.

இந்தியாவின் பெருமை

சுதந்திர இந்தியா என்ற வகையில் இந்தியாவிற்கு சுதந்திரம் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதியன்று கிடைக்கப்பெற்றது.

இன்று இந்தியாவானது கல்வி, போக்குவரத்து, வணிகம், மருத்துவம் என பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்றே வருகின்றதோடு பல்வேறுபட்ட நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வருபவர்களது எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என்றால் அதற்கான பிரதான காரணம் எமது தேசத்தின் சுதந்திரமாகும்.

அதாவது ஆரம்பகாலங்களில் இந்தியாவின் வளங்களை உணர்ந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றி ஆட்சி செய்து வந்தனர். அவ்வாறாக காணப்பட்ட போதிலும் பல போராட்ட தியாகிகளின் வீரச்செயல்களால் இன்று எமது இந்தியா தேசமானது சுதந்திரமாக காணப்படுகின்றது.

சுதந்திர இந்தியாவில் கல்வியின் பங்கு

கல்வி என்பது இன்று முக்கியத்துமிக்கதொன்றாக திகழ்கின்றது என்ற வகையில் கல்வியின் மூலமே இந்தியர்கள் இன்று பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.

இந்தியாவில் கல்வி அறிவால் பல்வேறு தொழிநுட்பம் மற்றும் அறிவியல் சாதனைகள் வெளிவருவதனை காணலாம்.

ஒரு நாட்டின் சுதந்திரத்தில் தங்கியுள்ளதொன்றே கல்வியாகும் என்றவகையில் இன்று இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாக கல்வி காணப்படுகின்றது.

இலவச உணவு, சீருடை, புத்தகங்கள் என கல்வியை தடையின்றி கற்க பல்வேறு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமையானது இந்திய மண்ணிண் சுதந்திரத்தின் வெளிப்பாடாகும்.

இந்தியாவின் சாதனைகள்

இன்று இந்தியாவானது சுதந்திரம் அடைந்ததற்கு பின்பு இருந்ததை விட பல வளர்ச்சிகளை கண்டு வருகின்றது.

உதாரணமாக சுதந்திரம் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பத்தில் ஒரு மனிதனது சராசரி வாழ்நாள் 32 வருடங்கள் காணப்பட்டமையானது இன்று 69 ஆக மாறியுள்ளமை மருத்துவ துறையின் வளர்ச்சியினை சுட்டுகின்றது.

விண்வெளித்துறையிலும் பல்வேறு சாதனைகளை கண்டே வருகின்றதோடு பொருளாதார ரீதியில் அந்திய செலவானி கையிருப்பில் உள்ள நாடுகளில் எட்டாவதாக இந்தியா காணப்படுகின்றமை சிறப்பிற்குறியதாகும்.

அதேபோன்று ஏற்றுமதி பொருளதாரம், உலகத்தரம் வாய்ந்த ஏவுகணைத்திட்டங்கள், விவசாயம் என பல்துறை சாதனைகளை படைத்து இந்தியாவானது திகழ்கின்றது.

சுதந்திர இந்தியாவை காப்பதில் இளைஞர்கள்

ஓர் நாட்டின் எதிர்காலமே இளைஞர்களின் கையிலேயே உள்ளது என்ற வகையில் இளைஞர்கள் சுதந்திர இந்தியாவை காப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றனர்.

அந்த வகையில் கொடிகாத்த குமரன் மற்றும் பகத்சிங், சுபாஸ் சந்திர போஸ் போன்றோர் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா தேசத்தினை சுதந்திர இந்தியாவாக மாற்றியவர்களாவர்.

இந்தியாவின் சுதந்திரத்தை பேணுவதற்கு இன்றே இளைஞரானவர்கள் நாட்டின் கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை பேணி சிறந்த நாட்டை உருவாக்க வழிவகுக்க வேண்டும்.

முடிவுரை

சுதந்திர இந்திய தேசத்தின் பிரதான பங்கினை வகிப்பவர்கள் இளைஞர்கள் என்ற வகையில் நாட்டினை வளர்ச்சியடைய செய்வதில் துணைபுரிவதோடு மட்டுமல்லாமல் சிறந்த சாதனைகளை படைக்கவும் முன்வருவதன் மூலமே சிறந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

You May Also Like:

2047 எனது பார்வையில் இந்தியா கட்டுரை

அநேக மொழிகள் ஒரே இந்தியா கட்டுரை