இயற்கை சீற்றம் தடுக்கும் முறைகள் கட்டுரை

iyarkai seetram thadukkum muraigal

இயற்கையின் சீற்றத்தின் காரணமாக இன்று பல்லாயிரக்கணக்கான உயிர்களும், உடமைகளும் சேதத்திற்கு உட்பட்டே வருகின்றன. இன்று பல நாடுகள் இயற்கை சீற்றத்திற்கு ஆளாகி வருகின்றதனை காணக்கூடியதாக உள்ளது.

இயற்கை சீற்றம் தடுக்கும் முறைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இயற்கையின் சீற்றம் என்பது
  • இயற்கையின் சீற்றத்திற்கு வித்திடும் காரணங்கள்
  • இயற்கையின் சீற்றத்தினை தடுக்கும் வழிமுறைகள்
  • இயற்கையை பாதுகாப்போம்
  • முடிவுரை

முன்னுரை

இயற்கையின் சீற்றங்கள் ஏற்பட பிரதானமான காரணம் மனித நடவடிக்ககைள் ஆகும். இன்றும் மனிதர்கள் சூழலை மாசுபடுத்தும் நடவடிக்ககைகளை அதிகமாக மேற்கொண்டு வருகின்றனர். சூழலை சிறந்த முறையில் பேணி பாதுகாக்கின்ற போதே எம்மால் இயற்கை சீற்றங்களை இயன்றளவு தவிர்த்துக் கொள்ள முடியும்.

இயற்கையின் சீற்றம் என்பது

இயற்கையின் சீற்றம் எனப்படுவது யாதெனில் இயற்கையால் ஏற்படக்கூடிய பேரழிவுகளாகும். இயற்கையின் சீற்றத்தின் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் இடம்பெற்ற வண்ணமே காணப்படுகின்றது.

இயற்கை சீற்றங்களாக வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம், சுனாமி, வறட்சி, காட்டுத்தீ, சூறாவளி என பல்வேறுபட்ட சீற்றங்களை கூறலாம். இத்தகைய சீற்றங்களிலிருந்து எம் அனைவரையும் காத்துக்கொள்வதன் மூலமே சிறப்பாக இவ்வுலகில் வாழ முடியும்.

இயற்கையின் சீற்றத்திற்கு வித்திடும் காரணங்கள்

இயற்கை சீற்றமானது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்பட்டுள்ள போதிலும் இன்று பல இயற்கை சீற்றங்கள் மனித நடவடிக்கைகளாலேயே உருவாகின்றன.

அந்த வகையில் காடுகளை அழித்தல், நச்சு வாயுக்களின் பயன்பாடு, வாகனப் புகைகள், நெகிழிகளின் குப்பைகளை நீர் நிலைகளில் போடுதல், உள்நாட்டு போர்களின் போது பயன்படுத்தப்படும் நச்சுதன்மை வாய்ந்த அணுசக்திகளின் பயன்பாடு, மண்வளம் சுரண்டல், மரங்களை வெட்டுதல் என பல்வேறுபட்ட காரணங்களின் விளைவாக இன்று எம்மை இயற்கை சீற்றங்கள் ஆட்கொள்கின்றன.

இயற்கையின் சீற்றத்தினை தடுக்கும் வழிமுறைகள்

இயற்கை சீற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றே நீரை சிக்கனமாக பயன்படுத்துவதாகும். நீரை வீண்விரயம் செய்யாது சேமித்து வைப்பதன் மூலம் வறட்சி என்ற இயற்கை சீற்றத்தினை தடுத்து கொள்ள முடியும்.

சூறாவளி மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களை தவிர்க்கும் முகமாக நாம் அதிக மரங்களை நடுதல் அவசியமாகும். மேலும் காடுகளை அழிக்காமல் பேணி பாதுகாப்பதானது எம்மை பல்வேறு பேரழிவுகளிருந்து காக்கும்.

பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதினூடாக சூழலின் தூய்மையை பேணமுடியும். அதேபோன்று நெகிழிப்பாவனையை அடியோடு அழித்தல், கழிவுப்பொருட்களை நீர் நிலைகளில் கலக்கவிடாது உரிய முறைகளில் அகற்றுதல், இயற்கை வளத்தினை வீணாக்காது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்துதல் போன்ற வழிமுறைகளை கையாளுவதன் மூலம் இயற்கை சீற்றங்களை தடுத்து கொள்ள முடியும்.

இயற்கையை பாதுகாப்போம்

இயற்கையை பாதுகாப்பது என்பது இவ்வுலகில் பிறந்த அனைவரதும் தலையாய கடமையாகும். இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக 1980ம் ஆண்டு பன்னாட்டு பாதுகாப்பு சங்கமானது உருவாக்கப்பட்டது.

மேலும் உலக பாதுகாப்பு தினமாக ஜுலை 28ம் திகதி காணப்படுவதானது இயற்கையை பாதுகாப்பதன் நோக்கத்தினாலேயாகும்.

நிலம், நீர், காற்று போன்றவற்றின் மாசுபாட்டை குறைத்து பூமியை பசுமையாக மாற்றுவதற்கான நடவடிக்ககைளில் ஈடுபடுவதன் மூலமே இயற்கையை பாதுகாத்து கொள்ள முடியும்.

முடிவுரை

இயற்கை சீற்றங்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கை பாதுகாப்பின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதன் மூலம் எம்மையும் எமது சந்ததியினரையும் இயற்கை சீற்றத்தின் அழிவில் இருந்து காப்பாற்றி கொள்ள முடியும்.

You May Also Like:

இயற்கை அனர்த்தங்கள் கட்டுரை

இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை