கடந்த 1ம் திகதி இந்தியன் 2 இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இது சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு பெரிதாக எந்த பிரபலங்களும் பங்கு கொள்ளவில்லை. இப் படத்தில் நடித்த சித்தார்த் கூட பங்கு கொள்ளவில்லை.
நடிகர் சித்தார்த் அவருடைய மனைவி அதிதி ராவுடன் கனிமூன் கொண்டாட இத்தாலிக்கு போய்விட்டார். இவரும் இந்தியன் தாத்தாவுக்கு டிமிக்கி காட்டிவிட்டார்.ரஜனி ரசிகர்கள் அவரை எதிர்பார்த்து சென்றனர் அவரும் அங்கு வரவில்லை. அவர் இமய மலைக்கு சென்று விட்டார்.
இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வால், ராகுல் பிரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தியனுக்கு ரசிகர்களால் கொடுக்கப்பட்ட வரவேற்பை விட இந்தியன் 2 இற்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. ஆனால் இசைவெளியீட்டு விழா நடைபெற்றதில் இருந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு குறைந்து விட்டது.
இந்தியன் படத்தில் வரும் பாடல்கள் எதுவுமே நன்றாக இல்லை. என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். அனிருத்தையும் கலாய்த்து வருகின்றனர். இந்தியநுக்கு இசையமைத்தது போல இதற்கும் ஏ. ஆர் ராகுமானே இசையமைத்திருக்கலாம் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இந் நிலையில் இசைவெளியீட்டு விழா நேரு விழையாட்டு அரங்கில் நடைபெறுவதால் கூட்டம் வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவர்களை அழைத்துள்ளதாம் படக்குழு, அன்று விடுமுறை தினம் என்பதால் ஹாஸ்டலில் தங்கியுள்ள மானவர்களையாவது அனுப்பிவைக்குமாறு கெஞ்சி கேட்டனராம். அங்கு அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் எதுவுமே கொடுக்கவில்லையாம்.