இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவிற்கு வராமல் இமய மழைக்கு சென்ற ரஜனி!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக வுள்ள படம் தான் இந்தியன் 2. இந்தியன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வால், ராகுல் பிரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தியனுக்கு ரசிகர்களால் கொடுக்கப்பட்ட வரவேற்பை விட இந்தியன் 2 இற்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

இந்தியன் 2 படபிடிப்பின் போதே இந்தியன் 3 இற்கான படபிடிப்புகளும் நிகழ்கின்றன.இந்தியன் 2 இன் படபிடிப்புகள் நிறைவடந்த நிலையில் படம் வெளியாவதற்கு தயாராக இருக்கின்ற நிலையில் இந்தியன் 2 வெளியாகும் போதே இந்தியன் 3 இற்கான டீரெயிலரையும் வெளிவிட போவதாக அறிவிக்கபட்டுள்ளது. இந்தியன் 2 ஜூலை 12 ம் திகதி வெளியாகவுள்ளது.

இது மட்டுமல்லாது இந்தியன் படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய போவதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்தியன் படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் ஜீன் 7 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

ஐந்து வருடங்களாக உருவாக்கபட்டு வந்த இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் நண்பராக இருக்கும் நடிகர் ரஜனிகாந் வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர் அங்கு செல்லாது இமய மலைக்கு சென்றுவிட்டார். இமைய மலையில் வைத்து எடுத்த புகை படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். பொன்னியின் செல்லவன் படத்தின் இருவரும் ஒன்றாக சென்றனர்.

இதன் பின்னர் கமல்ஹாசன் பங்குபற்றும் எந்த நிகழ்ச்சியிலும் ரஜனி பங்கேற்ற வில்லை. இதற்கு பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டு விழாவில் ஏற்பட்ட மனகசப்பான விடயங்கள் தான் என்று கூறப்படுகின்றது.

more news