வெற்றிமாறனுடன் இணையும் லாரன்ஸ்!- வெளியான டைட்டில்

வெற்றிமாறன் தற்பொழுது விடுதலை-2 படத்தை இயக்கிக்கொண்டுள்ளார். விடுதலை படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார்.

கதாநாயகனாக அறிமுகமான நடிகர்களுக்கு முதல் படம் எப்போதும் வெற்றியை கொடுத்தது இல்லை. ஆனால் நடிகர் சூரிக்கு முதல் படமே மிகப்பெரும் வெற்றியை கொடுத்துவிட்டது.

சில நடிகர்கள் முதல் படத்தோடு காணாமல் போய் விட்டார்கள். ஆனால் சூரிக்கு இன்னும் பல படவாயப்புகளை கொடுத்துள்ளது.

ஒரு காமெடியனை கூட கீரோவாக மாற்ற முடியும் என்று நிரூபித்து விட்டார் வெற்றிமாறன். இந்த படத்தில் சூரியா, தனுஷ் நடித்திருந்தால் தேசிய விருதே கிடைத்திருக்கும் என்று அனைவரும் கூறியுள்ளனர். அனைத்து ரசிகர்களுமே விடுதலை-2 க்கு காத்து கொண்டிடுக்கின்றனர்.

வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் வாடிவாசலைத்தான் தொடங்குவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் விடுதலை-2 ஐ முடித்து விட்டு வெற்றிமாறன் லாரன்ஸ் உடன் இணைந்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லாரன்ஸ் நடிக்கும் இரண்டு படங்களையும் முடித்த பின்பு தான் இந்த படபிடிப்பு ஆரம்பமாகும்.

“அதிகாரம்” கதையை கேட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும் வெற்றிமாறன் உடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என்று லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

More News