ஒரு மனிதனானவன் சிறந்து விளங்க வேண்டுமாயின் பவ்யம் அவசியமாகும். அந்த வகையில் சான்றோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் ஐந்து ஒழுக்கங்களுள் ஒன்றே பவ்யமாகும்.
பவ்யம் இல்லாத ஒரு மனிதனே இன்று தற்பெருமை, பொறாமை கொண்ட மனிதனாக காணப்படுகின்றான்.
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து”
வள்ளுவர் தனது குறளில் மேற்குறிப்பிட்டவாறு குறிப்பிடுவதானது பவ்யமாக இருப்பதனையே வலியுறுத்தி நிற்கின்றது. பவ்யம் என்பது மனிதர்களிடையே காணப்படும் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகும்.
பவ்யம் வேறு பெயர்கள்
- பணிவு
- மரியாதை
- அடக்கம்
- தலை வணக்கம்
பவ்யமுடையவர்களின் சிறப்புக்கள்
எம் ஒவ்வொருவரது வாழ்வும் பவ்யமாக காணப்படுகின்ற போதே எம்மால் வாழ்வில் வெற்றியீட்ட முடியும். மேலும் புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் சிறந்த தொன்றாக பவ்யமானது காணப்படுகின்றது.
அதேபோன்று பவ்யம் உடையவர்களின் வாழ்வில் தோல்வியே கிடையாது என்றே கூற முடியும். பவ்யமே வாழ்வின் சிறந்த அணிகலன்களாகும்.
சுய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பவ்யம்
மனிதனானவன் தனது வாழ்வில் சுய முன்னேற்றம் அடைய வேண்டுமாயின் பவ்யம் அவசியமாகும். அதாவது பவ்யமே வாழ்வின் திறவுகோலாகும்.
மேலும் பவ்யமாக ஒரு செயலை மேற்கொள்வதனூடாகவே எமது இலட்சியங்களை அடைந்து கொள்ள முடியும். பவ்யமான வாழ்வை வாழுகின்றவர்கள் தனது வாழ்வில் உயர்ந்த நிலையினையே அடைவார்கள்.
You May Also Like: