இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் இறப்பு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். நாம் உலகில் வாழுகின்ற போதே மகிழ்ச்சியாக வாழ்வது சிறந்ததாகும்.
ஒவ்வொரு மனிதனும் தான் இறந்ததன் பின்னர் சொர்க்கம் அல்லது நரகத்திற்கே செல்வார்கள் என பலரும் நம்புகின்றனர். அந்தவகையில் அனைவரும் சொர்க்கம் செல்லவே ஆசைப்படுவார்கள். ஏனெனில் நரகமானது பயங்கரமானதாக காணப்படும். நரகத்தில் தான் எமன் இருப்பார் என பலரும் நம்புகின்றனர்.
எமன் வேறு பெயர்கள்
- தருமதேவன்
- தருமன்
- காலதேவன்
- எமராஜன்
- மறலி
- காலன்
- இயமன்
- சமன்
- கூற்றுவன்
நரகமும் எமனும்
பூலோகத்தில் வாழும் மக்கள் அனைவரும் தான் செய்த நன்மை, தீமைகளை வைத்தே நன்மை செய்தவர்கள் சொர்க்கத்திற்கும் தீமை செய்தவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள்.
பாவங்களுக்கான தண்டனை வழங்கப்படும் ஓர் இடமாகவே நரகம் காணப்படுகிறது. இந்த நரகத்திற்கு அதிபதியாக எமனே திகழ்வதோடு இறப்பவர்களுக்கு தீர்ப்பு அளிப்பவராகவும் இவரே காணப்படுகின்றார்.
இந்து மதம் கூறும் எமனின் குணவியல்புகள்
எமன் என்பவர் எருமையை வாகானமாக கொண்டவராக காணப்படுகிறார். மேலும் இவர் தனது இடக் கரத்தில் பாசக் கயிற்றை வைத்துக் கொண்டு மனிதர்களின் ஆன்மாவை உடலிலிருந்து பிரிக்கின்றார்.
அதேபோன்று சூரிய தேவனின் மகனாகவும் எமனே காணப்படுவதோடு தர்மத்தின் தலைவராகவும் திகழ்கின்றார். மேலும் இவரது மனைவி சியாமளாதேவி எனவும் உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
You May Also Like: