காளை வேறு பெயர்கள்

kaalai veru peyargal in tamil

காளை என்பது கழுத்திற்கும் முதுகிற்கும் நடுவில் உயர்ந்த திமிலுடன் கம்பீரமான தோற்றத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். எமது கலாச்சாரத்தில் ஆரம்ப காலங்களில் இருந்து மாடுகள் எமது வீட்டின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகின்றது.

காளைகளை நிலத்தை உழுவதற்கும், சுமை ஏற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இன்று ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்களிலும் காளைகள் பங்குபற்றுகின்றன. காளைச் சண்டையில் புகழ்பெற்ற நாடு டெல்லி, ஸ்பெயின் ஆகும்.

காளை வேறு பெயர்கள்

  • எருது
  • மூரி
  • ஏறு
  • பகடு
  • ஆண் மாடு

ஏறுதழுவல்

தமிழர்களின் மரபு வழி விளையாட்டுக்களில் ஒன்றே ஏறுதழுவலாகும். இங்கு ஏறு என்பது காளை மாட்டையே குறித்து நிற்கின்றது. அந்தவகையில் காளை மாட்டின் திமிலை பிடித்து அடக்குவதே இவ்விளையாட்டாகும்.

ஏறுதழுவலானது இன்று மதுரை, திருச்சி, வேலூர் மாவட்டம், தேனீ மாவட்டம் என தமிழ் நாட்டில் சிறப்புமிக்கதொரு விளையாட்டாக ஏறுதழுவல் காணப்படுகின்றது.

காளை போர்

காளை போரானது எசுப்பானியா, போர்ச்சுகள், மெக்சிகோ போன்ற நாடுகளில் தேசிய பொழுதுபோக்காக விளையாடப்படுகின்றது. காளைகளை அரங்கிற்குள் விரட்டி அதனை ஆத்திரமூட்டி சண்டையிட்டு கொள்ள வைப்பதே இந்த காளைப் போராகும்.

சிந்து சமவெளி நாகரிகத்தில் காளை வழிபாடு

காளை வழிபாடானது சிறப்பிடம் பெற்றதொன்றாக சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படுகின்றது. இன்றும் காளைகளை உயர்வாக மதித்து நடாத்தும் பழக்கம் கிராம புறங்களில் உள்ளது.

மேலும் சகாங்கீர் காலத்தில் காளைக்கும் புலிக்கும் இடையே போர் நிகழ்ந்துள்ளமையினையும் வரலாற்று தொடர்பான நூல்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.

You May Also Like:

பவ்யம் வேறு பெயர்கள்

குரங்கு வேறு பெயர்கள்