நடிகர் விஜய் தற்பொழுது கோட் படத்தில் நடித்து வருகிறார். இவர் தளபதி 69 ஓடு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இவ் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது அரை நேர அரசியல் வாதியாக இருக்கும் விஜய் தளபதி 69 ஓடு முழு நேர அரசியல் வாதியாக மாறவுள்ளதாக கூறியுள்ளார்.
இவருடைய கோட் படத்தில் வரும் விசில் போடு பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
அந்த பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போதும் ரசிகர்கள் மத்தியல் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இப் படம் செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக போட்டியிட இருக்கிறார். இதனால் விஜய்யின் கடைசி படத்தை தயாரிக்க பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் இருந்தது.
இந்நிலையில் தளபதி விஜய் தளபதி 69 ஓடு அரசியலுக்கு செல்வதாலும் சினிமா வரலாற்றிலேயே தனது இறுதி படம் என்பதாலும் இப் படத்திற்கு அதிக சம்பளம் கேட்டுள்ளார்.
தளபதி 69 ஐ டிவிவி தன்யா எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.
விஜய் தனது இறுதி படம் என்பதால் டிவிவி தன்யா எனும் தயாரிப்பு நிறுவனத்திடம் 200 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.
இதை கேட்ட நிறுவனம் அதிர்ச்சியல் தாம் இதிலிருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல் வதந்தி எனக்கூறப்படுகின்றது.
தளபதி படமெற்றால் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் ஓடி வரும் இதில் இறுதி படம் என்றால் அவர்கள் தமக்கு கிடைத்த வாயப்பை நழுவ விடமாட்டார்கள்.