ஹிப் ஹாப் ஆதியை பார்க்க வேண்டும்!- கதறி அழும் கல்லூரி மாணவி

தமிழ் சினிமாவிற்கு யூடியூப் மூலமாக பிரபலமாகி அறிமுகமானவர் தான் ஹிப் ஹாப் ஆதி. ஹிப் ஹாப் பாடல் பாடுவதில் சிறந்தவர். இதனால் இவரை ரசிகர்கள் ஹிப் ஹாப் ஆதி என்று அழைத்து வருகின்றனர்.

சுந்தர் சி இயக்ககூய ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் 20 இற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அதன் பின் மீசையை முறுக்கு படத்தின் மூலம் கிரோவாக அறிமுகமானார். இப் படம் இவருக்கு பெரிய வெற்றியையும் வரவேரபையும் கொடுத்தது. குறிப்பாக கல்லூரி மாணவர்களால் இப் படம் பெரிதும் ரசிக்க பட்டது.

“கிளப்புல மப்புல” என்ற பாடல் மூலமாக தான் இவர் பிரபலமானர். இப் பாடல் பெண்களை கலாய்த்து பாடியிருப்பர். நீயா நானா ஷோவில் பங்கு பற்றிய பெண் இதை பற்றி பேசியுள்ளார். இதை பார்த்த ஆதி அவர் நடித்த அடுத்த படத்தில் நானும் “கிளப்புல மப்புல” என்று படியாது தவறு என்று கூறியுள்ளார்.

இதை பார்த்த அனைவரும் இப்பிடியெல்லாம் ஒரு மனிதன் இருப்பானா? என்று ஆதியை பாராட்டியும் வந்தனர்.

இப் படத்தின் வருகையிலே இவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாகி விட்டனர். இப் படத்தை தொடர்ந்து இவர் நடித்த அனைத்து படங்களும் பெரிய வரவேற்பை பெறவில்லை.

இவ்வாறு இருக்க தற்போது பிடி சார் படத்தில் நடித்துள்ளார். இப் படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 25 ஆம் திகதி வெளியான படம் 2 நாட்களில் 2 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இவ்வாறு இருக்க பிடி சார் படத்தை புரமோட் செய்தும் வருகின்றார். இவருடைய ரசிகை ஒருவர் இவரை கோவையில் பார்த்துள்ளார். ஆனால் அவருடன் பேசமுடியவில்லை.

இதனால் அந்த கல்லூரி மாணவி கதறி அழுகின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆதி அண்ணாவை போலவே ஆக வேண்டும் என்பது தான் ஆசை ஆதி அண்ணாவை பார்த்ததும் பேசக் கூட முடியாமல் நின்று விட்டேன் . அவருடன் போட்டோ கூட எடுக்க முடியவில்லை. பள்ளி, கல்லூரிகளில் பாடல்களை பாடி வருகிறேன். என்று கூறி அழுகின்றார்.

இந்த வீடியோவை பார்தவர்கள் இளம் பெண்கள் சினிமாவில் மூழ்கி இருப்பது ரொம்பவே தவறான விடையம் அன்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

more news

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*