ஷூட்டிங்கால அப்பவோட இறப்புக்கு கூட போக முடியல..-முதல் முதலாக மனம் திறந்த கோவை சரளா!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வருபவர் தான் கோவை சரளா.

கோயம்புத்தூரில் ஏப்ரல் 7ம் தேதி 1962ம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு 4 சகோதரிகள் மற்றும் 1 சகோதரன் உள்ளனர். , 1983ம் ஆண்டு முந்தானை முடிச்சு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் கோவை சரளாவை அறிமுகமானார்.

பின்னர் கதாநாயகியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். காஞ்சனா படத்தில் இவரின் நகைச்சுவை நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து காஞ்சனா2,காஞ்சனா 3, அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3, அரண்மனை 4 , செம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது வரைக்கும் இவர் 800 ரக்கும் அதிகம்மான படங்களில் நடித்துள்ளார்.

இவர் வைகை புயல் வடிவேலுடன் சேர்ந்து நடிக்கும் படங்கள் எல்லாம் பெரும் வாரவேற்பை பெற்றது.

இன் நிலையில் தற்போது இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய வீடியோ காணொளி வைரல் ஆகி வருகின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கோவை சரளா தன் தந்தை குறித்து பேசியுள்ளார். என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். அதனால் என்னுடைய எனக்கு கோவை சரளா அனைவரும் அழைக்கின்றனர்.

எனக்கு திருமணம் செய்து கொள்வதற்கு ஆசை இல்லை அதனால் தான் திருமணம் செய்யாமலே இருந்து விட்டன. என்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான விஷயம் என்னவென்றால் அது என்னுடைய தந்தையினுடைய இறப்பு தான்.

ஒருமுறை சூட்டிங் காக ஊட்டிக்கு போயிருந்தேன். அப்போதுதான் அப்பா இறந்துவிட்டார். நான் நடித்த படத்தோட தயாரிப்பு நிறுவனம் ரொம்ப சிறியது. அந்த படத்தில் எனக்கு முழு நீள காட்சிகள் இருந்தது.

படத்தை நிறுத்திவிட்டால் தயாரிப்பாளருக்கு ரொம்ப நஷ்டம் ஏற்படும். அதனால் தான் படப்பிடிப்பை நிறுத்த முடியவில்லை. அப்பாவை பார்க்க முடியாமல் போனது. இதனால் எல்லோருமே என்னை தப்பாக புரிந்து கொண்டார்கள். எனக்கு படமும் பணமும் முக்கியம் கிடையாது என்று பேசி இருக்கிறார்.

more news

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*