நன்செய் நிலம் என்றால் என்ன

nansei nilam in tamil

ஒரு நிலத்தினை அதனுடைய மண் வளத்தினையும் அதன் தரத்தினையும் அடிப்படையாக வைத்து தான் நிலத்தின் வகை என்ன என்பதனை பாகுபாடு செய்வார்கள்.

நிலமானது பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வகை நிலம் தான் நன்செய் நிலம் ஆகும்.

நன்செய் நிலம் என்றால் என்ன: நன்செய் நிலம் என்பது நீர்ப்பாசன ஆதாரங்களான ஏரி, கண்மாய், ஆறு போன்ற நீர்ப்பாசன வசதிகளைக் கொண்ட நிலமாகும்.

நன்செய் நிலத்தின் பயன் பாடுகளும், சிறப்பம்சங்களும்

நன்செய் நிலம் என்பது தற்காலத்தில் மக்கள் மத்தியில் நஞ்சை நிலம் எனவும் அழைக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக ஏரிக்கு கீழே இருக்கும் மற்றைய நிலங்களைக் காட்டிலும் இந்நிலமானது மதிப்பில் உயர்ந்ததாக காணப்படுகின்றது.

ஆற்று நீர், தேக்கி வைக்கப்பட்டுள்ள குளத்து நீர், கிணற்று நீர் ஆகிய நீர் வளங்களைக் கொண்டு ஓர் ஆண்டிற்கு மூன்று போகங்கள் வரை வேளாண்மை செய்யக் கூடிய நிலமாக நன்செய் நிலம் காணப்படுகின்றது.

நன்செய் நிலத்தின் தன்மையானது அதிக நீரோட்டத்தினை தேக்கி வைத்திருப்பதனால் நீண்ட காலம் நீர் தேவையான பயிர்களை நாம் இங்கு பயிரிடலாம்.

உதாரணமாக நாம் இந்நிலத்தில் பயிரிடக் கூடிய பயிர்களாக நெல், கரும்பு, வாழை என்பவற்றைக் கூறலாம். இந்நிலத்தில் பெரும்பாலான மக்கள் இவ்வாறான பயிர்களை பயிரிட்டு பெரிய இலாபத்தினை ஈட்டுகின்றனர்.

You May Also Like:

சதுப்பு நிலம் என்றால் என்ன

புஞ்சை நிலம் என்றால் என்ன