நாம் வாழக்கூடிய உலகானது இன்று பல்வேறு வகைகளிலும் மாசுபட்டுக் கொண்டே செல்கின்றது. சூழல் மாசுக்கு மிகவும் முக்கியமான ஒரு காரணியாக பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை காணப்படுகின்றன.
இதனாலேயே இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பாவனைகளை குறைத்து சூழலை பாதுகாக்கும் நோக்கிலேயே “மீண்டும் மஞ்சப்பை” எனும் புரட்சி எம் நாட்டில் எழுந்துள்ளமையைக் காணலாம்.
மீண்டும் மஞ்சப்பை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நெகிழிப் பாவனை
- நெகிழியின் தீமைகள்
- நெகிழியை ஒழித்தல்
- மஞ்சப்பையின் நன்மைகள்
- முடிவுரை
முன்னுரை
“மீண்டும் மஞ்சப்பை” எனும் வாசகமானது தற்காலங்களில் மிகவும் பிரபல்யமாக பேசப்படுகின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. அதாவது ஊடகங்கள், வலைத்தளங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பரவலாக கதைக்கப்படக்கூடிய ஒன்றாக இது மாறி உள்ளது.
ஆரம்ப காலங்களில் எமது முன்னோர்கள் மஞ்சப்பையனை பயன்படுத்தி இருந்த போதும், காலப்போக்கில் அது அழிவுற்று, நெகிழிப் பாவனையாக மாற்றம் கண்டது.
இது எமது ஆரோக்கியத்திற்கும் சூழலுக்கும் கேடுகளை விளைவிப்பதனால் அவற்றை தவிர்ந்து மீண்டும் மஞ்சப்பையினை உபயோகிக்க வேண்டும் என்பதற்காக “மீண்டும் மஞ்சப்பை” எனும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதை காணலாம்.
நெகிழிப் பாவனை
நாம் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய 21ஆம் நூற்றாண்டு காலப்பகுதியானது நவீனமயமாக்கம் அடைந்து பல்வேறு புதிய விடயங்களை உட்கொண்டு காணப்படுகின்றது.
இந்த வகையில் ஆரம்ப காலங்களைப் போல் அல்லாது தற்காலங்களில் பொலித்தீன் உறை, பிளாஸ்டிக் பாத்திரங்கள், பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் சார்ந்த பாவனைப் பொருட்கள் என்பன அதிகமாக மக்களால் பாவிக்கப்பட்டு வருவதனை காணலாம்.
கடைத்தெருக்கள், காய்கறி வாங்கும் சந்தைகள், மீன் சந்தைகள் போன்ற அனைத்திலும் இன்று பொலித்தீன் உறை பயன்பாடு என்பது அதிகமாகவே காணப்படுகின்றது. பொலித்தீன் பாவனையை இல்லாது ஒழிக்கும் நோக்கிலேயே “மீண்டும் மஞ்சப்பை” எனும் கருத்து வலுப்பெற்றுள்ளது.
நெகிழியின் தீமைகள்
எமது சூழலில் வாழக்கூடிய நாம் அனைவரும் நெகிழி பாவனைகளை அதிகமாக மேற்கொள்வதன் மூலமாக எமக்கும் எமது சூழலுக்கும் பல்வேறு வகையான தீமைகள் கிடைக்கப்பெறுகின்றன.
இவ்வாறான நெகிழி பாவனைகள் அதிகமாகுவதால் சூழல் மாசும் அதிகமாகவே இடம்பெறுகின்றது. நெகிழிகள் மக்காத குப்பைகளாக காணப்படுவதனால் சூழல் மாசு என்பது தடுக்க முடியாததாக மாற்றம் அடைந்துள்ளது.
மேலும் மண் வளம் பாதிக்கப்படுதல், நீர் மாசடைதல், உடல் ஆரோக்கியம் அற்றுப்போதல், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக காணப்படுதல் போன்றவாறான பல்வேறு தீமைகள் இந்த நெகிழி பாவனைகளின் மூலம் உருவாவதை காண முடியும்.
நெகிழியை ஒழித்தல்
மனித ஆரோக்கியத்திற்கும், சூழலின் பசுமையை பாதுகாப்பதற்கும் நெகிழியின் பாவனையை குறைத்தல் அல்லது நெகிழியை ஒழித்தல் என்பது மிகவும் அத்தியாவசியமான தேவையாக உணரப்படுகின்றது.
இதனால் தான் இன்று இந்தியாவின் பல பகுதிகளிலும் நெகிழியை பற்றியும் அதன் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறாக நெகிழிகளின் தீமைகள் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து அதன் பாவணையை இல்லாது ஒழித்து ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும் எண்ணத்திலேயே இந்த “மீண்டும் மஞ்சப்பை” எனும் புரட்சி எழுந்துள்ளமையைக் காணலாம்.
மஞ்சப்பையின் நன்மைகள்
நெகிழி ஆனது எமக்கும், எமது சந்ததிகளுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடியனவாகும். ஆனால் இவ்வாறான ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க கூடிய ஒன்றாக மஞ்சப்பை காணப்படுகின்றது.
அதாவது மஞ்சப்பை மண்ணினுள் இலகுவாக மக்கும் தன்மை கொண்டதாகவும், நச்சுத்தன்மை எதுவும் அற்றதாகவும் காணப்படுகின்றமையானது மக்கள் மஞ்சப்பைகளை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
நெகிழி உறைகளுக்குப் பதிலாக ஆரம்ப காலங்களைப் போன்று மஞ்சப்பை பயன்படுத்துவதே சிறந்தது என இன்று பல்வேறு பிரச்சாரங்கள் ஏற்பட காரணமும் இந்த மஞ்சப்பையின் நன்மைகளே ஆகும்.
முடிவுரை
மனித ஆரோக்கியத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் மண் வளம் என்பன எப்போதும் சிறப்பாக அமைதல் வேண்டும். அப்போதுதான் நாமும் எமது சந்ததிகளும் சிறப்பாக வாழ முடியும்.
இதன் அடிப்படையில் எமக்கும் எமது சந்ததிகளுக்கும் ஆபத்தாக அமையக்கூடிய நெகிழி பாவனைக்குப் பதிலாக மீண்டும் மஞ்சப்பைகளை பயன்படுத்துவதே ஒரு சிறந்த முடிவு என்பதை நாம் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
You May Also Like: