தமிழ் சினிமாவிலே முன்னிலை நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இன்று தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இவர் தற்போது அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பித்து அதன் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷசாராயம் அருந்தி 100 இற்கும் மேற்பட்டோர் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் 25 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அரசுதான் காரணம் என்று சுட்டி காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இவர்களையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இன்று 50 பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதனால் திரையரங்குகளில் போக்கிரி மற்றும் துப்பாக்கி படங்கள் ரீ ரிலீஸ் செய்யபட்டுள்ளது. சமீபத்தில் 2004 ஆண்டு வெளியான கில்லி திரைபடம் ரீ ரிலீஸ் செய்யபட்டது. இது 30 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
தற்போது துப்பாக்கி திரைப்படம் 32 லட்சம் வசூல் செய்துள்ளது. போக்கிரி திரைபடம் 28 லட்சம் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் இரு திரைபடங்களும் இணைந்து 34 லட்சம் வசூல் செய்துள்ளது.
தற்போது இவர் கோட் படத்தில் நடித்து வருகின்றார். படம் விநாயகர் சதுரதியை முன்னிட்டு செப்டெம்பர் மாதம் 9 ம் திகதி வெளியாகவுள்ளது. இப் படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இப் படத்திற்கு விஜய் 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இவருடைய இறுதி படமான தளபதி 69 இற்கு 250 கோடி சம்பளமும் கேட்டுள்ளார்.