கல்கி 2898 படத்தின் டீரெயிலர் வெளியானது!

படத்தில் கமல்ஹாசன் வில்லனாகவும் நடித்துள்ளார். இப் படம் இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேசத்தில் பல நாடுகளிலும் வெளியாக்குகின்றது. இதனால் இப் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.

இப் படத்தில் காப்பி அடிக்கபட்டுள்ளது என்று உரிமையாளர் கூறியுள்ளார். கல்கி 2898 AD படத்தின் ட்ரெய்லரில் காட்டப்பட்ட இடம் ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன் வந்த ஒரு ஆர்ட் தான் என ஆதாரத்துடன் அதை உருவாக்கியவர் நிரூபித்துள்ளார்.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் கல்கி 2898. இப் படத்தில் கமல்ஹாசன், அமிதப் பட்சன், தீபிகா படுகோன், திஷா பதனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தென்கொரிய ஓவியக் கலைஞரான சுங் சோய் என்பவர் அவரது சமூக வலைத்தளத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு அவர் வரைந்த ஒரு ஓவியத்தையும், ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ள காட்சி ஒன்றையும் பதிவிட்டு, “கலைப் படைப்புகளை அனுமதி வாங்காமல் பயன்படுத்துவது ஒரு மோசமான நடைமுறை. இந்த சட்டமற்ற சூழலில் இப்படியாக செய்வதை நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் எதிர் பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் இப் படம் அனுமதி இன்றி ஒருவருடைய ஓவியங்களை காப்பி செய்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியான டீரெயிலரில் முன்பு காண்பிக்காத பலவற்றை காட்டியுள்ளனர்.

more news