கணினியும் அதன் பயன்பாடும் கட்டுரை

kaniniyum athan payanpadum katturai in tamil

தொழிநுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள பெரிய வளர்ச்சியே கணினியாகும் என்றவகையில் இன்று கணினியின் பயன்பாடானது அளப்பரியதாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் கணினி இல்லாத துறையே இல்லை என்றளவிற்கு கணினி பாவனையானது வளர்ந்து வருகின்றது.

கணினியும் அதன் பயன்பாடும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கணினி என்பது
  • கணினியின் பயன்கள்
  • கணினியின் வகைகள்
  • இன்றைய காலகட்டத்தில் கணினி பாவனை
  • முடிவுரை

முன்னுரை

மனிதனது அறிவியல் வளர்ச்சியில் பிரதான பங்கினை வகிப்பது கணினியாகும். அந்த வகையில் மனித வாழ்க்கையில் அவசியாமனதொன்றாக கணினி காணப்படுவதோடு மட்டுமல்லாது இன்று கல்வி நடவடிக்கைகளில் பிரதானமனதொன்றாக கணினியானது திகழ்கின்றது. இக்கட்டுரையில் கணினி பற்றியும் அதன் பயன்பாடும் பற்றியும் நோக்கலாம்.

கணினி என்பது

கணினி எனப்படுவது யாதெனில் கட்டளைத் தொகுதிகளில் மற்றும் நிரல்களின் மூலம் சில பணிகளை மேற்கொள்ளும் இயந்திரமாகும். இக்கணினியானது 1946ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆரம்பகாலங்களில் கணக்கிடுவதனை நோக்காக கொண்டு மணிச்சட்டம் உருவாக்கப்பட்டது.

1833ம் ஆண்டு சார்ள்ஸ் பாபேஜ் என்பவரே கணினியை வடிவமைத்தார். பிற்பட்ட காலங்களில் கணினியினது வளர்ச்சியியானது பாரியளவு வளர்ச்சியினை கண்டது.

இன்று கல்வி, வணிகம், மருத்துவம், அறிவியல் என பல துறைகளில் கணினியின் பயன்பாடானது இடம் பெறுகின்றது.

கணினியின் பயன்கள்

கணினியின் பயன்பாடுகளானவை இன்று பல்வேறுபட்ட வகையில் காணப்படுகின்றது. அதாவது கணினியானது இன்று சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக காணப்படுகின்றது. மேலும் வேலை வாய்ப்புக்களை பெற்று தரக்கூடியதொரு சாதனமாக திகழ்கின்றதோடு மட்டுமல்லாமல் மருத்துவம், கல்வி, அறிவியல் என பல துறைகளில் பயன்படுத்தகூடியதாகவும், உடனுக்குடன் தகவல்களை எமக்கு வழங்க கூடியதாகவும் காணப்படுகின்றது.

தரவுகளை சேகரித்து வைக்க கூடியதாகவும், உடலிலுள்ள நோய்களை கண்டறியவும், மின்னஞ்சல், இணையம் போன்றவற்றினூடாக ஒருவருக்கொருவர் தொடர்புகளை பேணவும், தொழிற் துறைகளில் பங்காற்றவும் என பல்வேறு பயன்களை தன்னகத்தே கணினியானது கொண்டுள்ளது.

கணினியின் வகைகள்

நவீன தொழிநுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக இன்று கணினியானது பல்வேறு மாற்றங்களை தன்னகத்தே கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றதனை காணலாம்.

அதாவது மடிக்கணினி, மேசைக்கணினி, பணிநிலைக்கணினி, கையடக்க கணினி, மீத்திறன் கணினி, பெருங்கணினி என பல்வேறுபட்ட வகையில் அளவுகளாலும் திறன்களாலும் தயாரிக்கப்பட்டு காணப்படுகின்றன.

இன்று கணினியின் பயன்பாடானது அதிகரித்து காணப்படுவது போன்று அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டேவருகின்றது.

இன்றைய காலத்தில் கணினியின் செயற்பாடானது அனைத்து செயற்பாடுகளிலும் இன்றியமையாத ஒன்றாகும்.

இன்றைய காலகட்டத்தில் கணினி பாவனை

கணினியினுடைய பாவனையானது மனிதனுக்கு பல வகையில் உதவக்கூடியதாக காணப்படுகின்றது.

இன்று சிறுகுழந்தை முதல் பெரியவர் வரை அனைவராலும் பயன்படுத்தக்கூடியதொன்றாக கணினியானது காணப்படுகின்றது.

ஆரம்ப காலங்களை போலல்லாது இன்று கணினியின் வளர்ச்சியானது உடலிலுள்ள நோய்களை கண்டறியவும் பயன்படுகின்றது.

இன்று கணினியினை இயக்க முடியாத குழந்தைகளே இல்லை என்றளவிற்கு கணினியின் பயன்பாடானது காணப்படுகின்றதோடு மட்டுமல்லாது கணினி இன்றேல் உலகமே இல்லை என்றளவிற்கு கணினியினது செல்வாக்கானது காணப்படுகின்றது.

முடிவுரை

இன்று சமூகத்தோடு இரண்டறக் கலந்த ஒரு சாதனமாகவே கணினியானது திகழ்கின்றது என்ற வகையில் நாம் அனைவரும் கணினியை சரியான வழியில் பயன்படுத்துவதன் மூலமே எதிர்காலத்தில் எம்மால் சிறந்த வாழ்க்கையை வாழ முடியும்.

You May Also Like:

செயற்கை நுண்ணறிவு கட்டுரை

தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் தீமைகள் கட்டுரை