தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் தீமைகள் கட்டுரை

tholil nutpa valarchi nanmaigal theemaigal katturai in tamil

இன்று உலகில் பாரியதொரு வளர்ச்சி கண்டு வரும் ஒன்றாக தொழில்நுட்ப வளர்ச்சியானது காணப்படுகின்றது.

தொழில்நுட்ப வளர்ச்சியானது பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு வித்திடுகின்றதோடு இன்று தொழில் நுட்பம் இல்லாமல் எதுவுமே கிடையாது என்ற நிலை உருவாகியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் தீமைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தொழில்நுட்பம் என்பது
  • தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள்
  • தொழில்நுட்ப வளர்ச்சியின் தீமைகள்
  • மனித வாழ்வில் தொழில் நுட்ப வளர்ச்சி
  • முடிவுரை

முன்னுரை

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று எமது தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. பல்வேறு செயற்பாடுகளை நொடிப் பொழுதில் நிறைவேற்றிக் கொள்வதற்கு தொழில் நுட்ப வளர்ச்சி துணை செய்கின்றது.

தினம் தினம் வளர்ச்சி கண்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

தொழில்நுட்பம் என்பது

தொழில்நுட்பம் என்பது யாதெனில் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பே தொழில்நுட்பமாகும். இன்று இத்தகைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது மனிதனது வேகத்திற்கும் திறனிற்கும் ஈடுகொடுக்கும் படி மேம்பட்டே செல்கின்றது.

அதாவது இன்று ஒரு விடயத்தை விரல் நுனியில் தேடிப் படித்துக் கொள்ளும் நிலை காணப்படுகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்கால தலைமுறைகளுக்கு ஏற்றாற் போல் மாற்றமடைந்து கொண்டு வருவதனை காணக்கூடியதாக உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள்

தொழில்நுட்ப வளர்ச்சியானது ஒரு நாட்டினுடைய வளர்ச்சியில் பாரியதொரு செல்வாக்கை செலுத்துகின்றது.

நாம் இன்று பயன்படுத்தும் தொலைபேசி வழியாக நாம் ஒரு இடத்திலிருந்து கொண்டு வேறு நாடுகளில் இடம் பெறும் செய்திகளை இலகுவாக அறிய முடிகின்றது.

அதேபோன்று ஏழை, பணக்காரர் என்ற வேறுபாட்டை ஒழித்து அனைவரும் தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்துகின்றனர்.

மேலும் கல்வி அறிவுடையோர் மாத்திரமன்றி கல்வியறிவில்லாதவர்களும் இலகுவாக ஒரு விடயத்தை மேற்கொள்ள தொழில்நுட்ப வளர்ச்சி உதவுகின்றது.

அதேபோன்று கல்வி, போக்குவரத்து, மருத்துவம், விவசாயம் என பல்வேறுபட்ட துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியானது காணப்படுகின்றமை எமக்கு இதனால் கிடைக்கப் பெறும் நன்மைகளே ஆகும்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் தீமைகள்

தொழில்நுட்ப வளர்ச்சியானது பல்வேறு நன்மைகளை கொண்டுள்ள போதிலும் தீமைகளும் அதனூடாக இடம் பெறுகின்றது.

அதாவது இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உருவானதே இணையமாகும். இன்று இந்த இணையமும் கணினி விளையாட்டுக்களும் ஒன்று சேர்ந்து மாணவர்களின் கல்வியை கேள்வி குறியாக்கும் நிலையை ஏற்படுத்துவதோடு பாலியல் ரீதியான வன்கொடுமைகளுக்கும் வழி வகுக்கின்றது.

மேலும் இணைய வழிக் குற்றங்கள் இடம்பெறல், தீவிரவாதம், தனிமை, சமூக ரீதியான ஒற்றுமையின்மை, வேலையில்லா திண்டாட்டம், சூழல் மாசடைதல் என பல்வேறு தீமைகளை தன்னகத்தே கொண்டு வளர்ச்சியடைந்து வரும் ஒன்றாகவே தொழில்நுட்பமானது காணப்படுகின்றது.

மனித வாழ்வில் தொழில் நுட்ப வளர்ச்சி

பல்வேறு மாற்றங்களை கொண்டு வெகு விரைவாக செல்லும் வாழ்க்கை பயணத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியினுடைய செல்வாக்கானது அதிகரித்து கொண்டே காணப்படுகின்றது.

அதாவது வீட்டில் சமைப்பதற்காக பயன்படுத்தப்படும் மின் அடுப்பு முதல் சலவை இயந்திரம் வரை அனைத்து விதமான செயற்பாடுகளிலும் தொழில்நுட்பம் காணப்படுகின்றது.

இன்று தொலைபேசி இல்லாத மனிதனே இல்லை எனுமளவிற்கு தொழில்நுட்பமானது மனித வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தி வருகின்றது. அத்தோடு தனது அத்தியாவசிய தேவை முதல் அனைத்து தேவையிலும் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டு வருகின்றது.

முடிவுரை

தொழில்நுட்ப வளர்ச்சியால் எவ்வாறு நன்மைகள் காணப்படுகின்றனவோ அதேபோன்று தீமைகளும் காணப்படுகின்றன. எனவே நல்லவற்றை மட்டும் தேடிக்கொண்டு தீயவற்றை தவிர்த்து நடத்தல் எமக்கும் எம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் சிறந்ததாகும்.

You May Also Like:

பெண் கல்வி மற்றும் நிதி சுதந்திரம் கட்டுரை

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கட்டுரை