பெண் கல்வி மற்றும் நிதி சுதந்திரம் கட்டுரை

pen kalvi matrum nithi suthanthiram

ஊது குழலை கையில் எடுக்கும் பெண்கள் எழுது கோலை கையில் எடுக்க வேண்டும் என்ற கூற்றின் மூலமாக பாரதி பெண் கல்வியின் முக்கியத்துவத்தையே எடுத்தியம்புகிறார். பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலமே சமூக முன்னேற்றத்தினை அடைந்து கொள்ள முடியும்.

பெண் கல்வி மற்றும் நிதி சுதந்திரம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பெண் கல்வியின் முக்கியத்துவம்
  • பெண் கல்வியின் பயன்கள்
  • பெண்களும் நிதி சுதந்திரமும்
  • இன்றைய காலகட்டத்தில் பெண் கல்வி
  • முடிவுரை

முன்னுரை

பெண்கள் சமூகத்திற்கு மத்தியில் சிறந்து விளங்கவும் தனது சுதந்திரத்தை பேணவும் கல்வியே அடித்தளமாக அமைகின்றது. பெண் ஒருவர் கல்வி கற்பதன் மூலமாக அவர்களது எதிர்காலமானது சிறந்து விளங்கும் என்பதோடு மட்டுமல்லாது வீடும் எமது நாடும் வளம் பெற பெண் கல்வியே முக்கியமானதாகும்.

பெண் கல்வியின் முக்கியத்துவம்

பெண்களானவர்கள் கம்பீரமாகவும் சிறப்பாகவும் வாழ்வதற்கு கல்வியானது முக்கியமானதாகும். சமுதாயத்தை முன்னேற்றுவதில் முக்கியத்துவமிக்கதொன்றாக பெண் கல்வியானது திகழ்கின்றது. பெண்களும் ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் கால் தடங்களை பதிப்பதில் பெண் கல்வியே துணை புரிகின்றது.

பெண் கல்வியின் பயன்கள்

பெண் கல்வியானது பல்வேறு மாற்றங்களுக்கு வித்திடும். அந்தவகையில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண்பதற்கும் அறியாமையை விட்டு கல்வியில் சிறந்து விளங்கவும் பெண் கல்வியே துணை புரிகின்றது.

மேலும் பெண்கள் தமக்கான உரிமைகளை வென்றெடுக்கவும், பெண்களுக்கான வன்முறைகளை எதிர்த்து போராடவும், மருத்துவம், விண்வெளித் துறை என பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு வித்திடவும் பெண் கல்வியே பிரதானமானதாகும்.

கல்பனா சவ்லா, இந்திராகாந்தி, மலாலா போன்ற பெண்கள் சாதனை படைப்பதற்கு கல்வியே உறுதுணையாக இருந்தது.

பெண்களும் நிதி சுதந்திரமும்

பெண்களின் நிதி சுதந்திரம் என்பது பெண்கள் தங்களது வாழ்க்கையில் பிறரை சார்ந்திருக்காது சுயமாக வருமானத்தை ஈட்டுவதே ஆகும்.

இதன் மூலமாக பெண்கள் தமக்கானதொரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்வதோடும், நிதி கல்வியறிவின் ஊடாக சேமிப்பு, முதலீடு மற்றும் கடன்களை நிர்வகித்து சிறந்த முடிவுகளை எடுக்கவும் நிதி சுதந்திரமானது துணை புரிகின்றது.

பெண்கள் தனது தொழில் ரீதியில் முன்னேற்றம் காணவும் நிதி சுதந்திரமானது அவசியமானதாக திகழ்கின்றது. மேலும் விவேகமான முறையில் முடிவுகளை எடுப்பதற்கும் நிதி சுதந்திரமே பெண்களுக்கு துணை நிற்கின்றது.

இன்றைய கால கட்டத்தில் பெண் கல்வி

இன்று ஆண்களைப் போலவே பெண்களும் கல்வியில் சளைத்தவர்கள் அல்ல என்பதனை எடுத்துக்காட்டும் முகமாக பெண்களும் கல்வித் துறையில் முன்னேற்றம் கண்டு கொண்டே வருகின்றனர்.

இன்று பெண்கள் உயர்ந்த நிலையில் திகழ்வதோடு மருத்துவம், புவியியல், வானவியல், கணிதம் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்து கொண்டே வருகின்றனர்.

அத்தோடு பெண் கல்வியானது நாட்டின் வளர்ச்சியிலும் பிரதான பங்கினை பெற்றே வருகின்றது. பெண்கள் தலைநிமிர்ந்து வாழ வழியமைத்து தருவதாக பெண் கல்வி திகழ்கின்றது.

முடிவுரை

பெண்களானவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும்போதே வீடும், நாடும் வளம் பெற்று திகழும். அதேபோன்று பெண்கள் தனது சொந்தக் காலில் நிற்பதற்கு பக்கபலமாக அமைவதே நிதிச் சுதந்திரமாகும். பெண்களானவர்கள் கல்வியிலும், நிதி சுதந்திரத்திலும் திறம்பட காணப்படுகின்ற போதே எதிர்கால வாழ்வை சிறப்பாக வாழ முடியும்.

You May Also Like:

பெண் கல்வி கட்டுரை

பெண்ணே நீ பெருமை கொள் கட்டுரை