இயற்கை அனர்த்தங்கள் கட்டுரை

iyarkai anarthangal katturai in tamil

இன்று இயற்கை அனர்த்தங்களானவை பல்வேறு பேரழிவுகளை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக உயிரினங்கள் மட்டுமல்லாது சூழலும் பாதிப்படைந்து கொண்டே வருகின்றது.

இயற்கை அனர்த்தங்களானவை எதிர்பாராத வகையில் நிகழக் கூடியதாக காணப்படினும் அவ்வாறான அழிவில் இருந்து எம்மை காத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

இயற்கை அனர்த்தங்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இயற்கை அனர்த்தம் என்பது
  • இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படும் விளைவுகள்
  • மனித நடவடிக்கைகளும் இயற்கை அனர்த்தங்களும்
  • இயற்கை அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பினை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

இன்று பெரும்பாலான இயற்கை அனர்த்தங்கள் இயற்கையாகவே நிகழ்ந்தாலும் பெரும்பாலான இயற்கை அனர்த்தங்கள் மனிதனது செயற்பாடுகளின் விளைவாகவே ஏற்படுகின்றன. இயற்கை அனர்த்தங்களின் விளைவால் இன்று பல்வேறு இழப்புக்கள் அடிக்கடி இடம் பெற்ற வண்ணமே உள்ளது.

இயற்கை அனர்த்தங்கள் என்பது

இயற்கை அனர்த்தங்கள் எனப்படுவது பௌதீகச் சூழலின் விளைவாக இயற்கையாக மனிதனுக்கு கேடு விளைவிக்கும் வகையில் இடம் பெறும் நிகழ்வுகளாகும்.

உதாரணமாக சுனாமி, சூறாவளி, எரிமலை வெடிப்பு, வறட்சி, காட்டுத் தீ, மண்சரிவு, மின்னல், நிலநடுக்கம் என பல்வேறு வகையான இயற்கை அனர்த்தங்கள் இடம் பெறுகின்றன.

அநேகமான இயற்கை அனர்த்தங்கள் மனிதர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளின் காரணமாகவே ஏற்படுகின்றன.

இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படும் விளைவுகள்

இயற்கை அனர்த்தங்களின் காரணமாக பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் உயிர்ச் சேதம், சூழல் மாசடைதல், பொருட் சேதம் என பல்வேறு வகையான விளைவுகள் எம்மை ஆட்கொள்கின்றன.

சுனாமி அனர்த்தத்தின் காரணமாக பல்லாயிரக் கணக்கான உயிர்கள் அழிந்து போனதோடு பொருளாதார இழப்பீடுகளுக்கும் எம்மை ஆளாக்கியது.

மேலும் வெள்ளப் பெருக்கின் காரணமாகவு வீடுகள், உடமைகள் சேதத்திற்குட்பட்டன. அதேபோன்றே காட்டுத் தீயின் காரணமாக பல காட்டு விலங்குகள் அழிந்துள்ளதோடு, பொருளாதார பாதிப்புக்கள், பயிர்ச் செய்கை நிலங்கள் பாதிப்படைதல் என பல்வேறு விளைவுகள் இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன.

மனித நடவடிக்கைகளும் இயற்கை அனர்த்தங்களும்

இன்று மனிதனானவன் பல்வேறு வகையில் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகி வருகின்றான்.

அதாவது காடுகளை அழித்தல், கடலை அண்டிய பகுதிகளில் கட்டிடங்களை அமைத்து கடலரிப்பினை ஏற்படுத்தல், விவசாய நடவடிக்கைகளுக்காக தீ வைத்தல், நச்சு வாகனப் புகைகள், கழிவுகளை கடலோடு கலத்தல் என பல்வேறு வகையான விடயங்களை மேற்கொள்வதனூடாக இன்று இயற்கை அனர்த்தங்களானது இடம் பெறுகின்றது.

அதாவது காடழிப்பானது மழை வீழ்ச்சியை குன்றச் செய்து வறட்சிக்கு வித்திடக் கூடியதாகவே காணப்படுகின்றது. மேலும் இன்று மனிதர்களது முறையற்ற செயற்பாடுகளின் காரணமாகவே இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இயற்கை அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள்

இயற்கை அனர்த்தங்களானவை திடீர் என்று இடம் பெறுவதன் காரணமாக அதிலிருந்து தற்காத்து கொள்வதானது சிக்கலானதொரு விடயமாகும். அவ்வாறு காணப்பட்ட போதிலும் சில இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே எதிர்வு கூற முடிகின்றமையால் அதிலிருந்து பாதுகாப்பினை பெற்றுக் கொள்ள முடியும்.

உதாரணமாக சுனாமி எச்சரிக்கையானது விடப்படுகின்ற போது கரையோரத்தில் வசித்து வரும் மக்கள் பிறிதொரு இடத்திற்கு செல்வதன் மூலம் தம்மை காத்து கொள்கின்றனர். அது போலவே இயற்கை அனர்த்தத்திற்கு முன்னர் தமது உடமைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்து கொள்கின்றனர்.

மேலும் மண்சரிவு ஏற்படும் இடங்களில் இருந்து விலகிச் செல்லல், காடுகளுக்கிடையேயான இடங்களில் தீ இடுவதை தவிர்த்தல் போன்றவற்றின் மூலம் எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

முடிவுரை

இயற்கை அனர்த்தமானது தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்ற வகையில் இயற்கை அனர்த்தங்களிலிருந்து எம்மையும் எமது உடமைகளையும் காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் அனைவரையும் பாதுகாத்து கொள்ள முடியும்.

You May Also Like:

இயற்கையின் நன்மைகள் கட்டுரை

இயற்கையும் மனித வாழ்வும் கட்டுரை