சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

summa kidaikkavillai suthanthiram katturai in tamil

எமது நாடானது சுதந்திரம் பெற்றிருக்குமேயானால் அதன் பின்னணியில் பல்வேறு வீரர்களில் தியாகம் காணப்படுகின்றது. நாம் அனைவரும் சுதந்திரமானது சும்மா கிடைக்கவில்லை என்பதை நினைவில் கொண்டு சுதந்தித்தை பேணும் வகையில் செயற்படுதல் அவசியமாகும்.

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வீரம் மற்றும் தியாகத்தின் சாட்சியே சுதந்திரம்
  • மகாத்மா காந்தியும் சுதந்திர போராட்டமும்
  • கொடி காத்த குமரன்
  • இந்திய சுதந்திரத்தில் நேதாஜி
  • முடிவுரை

முன்னுரை

நாம் எமது நாட்டில் இன்று மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்கின்றோமாயின் அதற்கான பிரதான காரணம் சுதந்திரமாகும்.

சுதந்திர வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டுமாயின் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை அறிந்து கொள்வதன் மூலமாகவே முடியும்.

நாம் இன்று அனுபவிக்கும் இந்த சுதந்திர காற்றுக்கு பின்னால் பல தியாகிகளின் உயிர் தியாகங்களும் அர்பணிப்புகளும் மறைந்துள்ளன என்பதை நாம் ஒரு போதும் மறக்க கூடாது.

வீரம் மற்றும் தியாகத்தின் சாட்சியே சுதந்திரம்

ஒரு நாடானது சுதந்திரம் என்ற கனியை சுவைக்கின்றது என்றால் அது சாதாரணமான விடயம் இல்லை. ஏனெனில் அந்த சுதந்திர கனியை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறுபட்டவர்களின் வீரமும், தியாகமுமே காரணமாகும்.

அந்த வகையில் இந்திய நாடானது சுதந்திரத்தை அடைந்துள்ளது என்றால் அதன் பின்னணியில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரர்களின் துணிகரமான செயல்கள் காணப்படுகின்றது.

மகாத்மா காந்தி, கொடிகாத்த குமரன், பகத் சிங், வ.உ.சி, சுபாஷ் சந்திரபோஸ் என பல தியாகிகள் சுதந்திரத்திற்கு காரணமாக உள்ளனர்.

தனது மண்ணிற்காக தனது உயிரையும் துச்சமாக நினைத்து போராடியதன் விளைவாகவே சுதந்திரமானது கிடைக்கப் பெற்றதே தவிர நம்மில் பலர் நினைத்தது போல் சுதந்திரமானது சும்மா கிடைக்கவில்லை.

மகாத்மா காந்திஜியும் சுதந்திர போராட்டமும்

இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்டவரே மகாத்மா காந்தி ஆவார். இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்றி நடாத்தியதோடு மட்டுமல்லாது சத்தியாக்கிரக போராட்டத்தின் மூலமாக நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவராவார்.

பல்வேறு இன்னல்களை அனுபவித்து தனது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீர தியாகி காந்தி ஆவார்.

கொடிகாத்த குமரன்

கொடிகாத்த குமரன் என அழைக்கப்படும் திருப்பூர் குமரனானவர் 1932ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி இடம் பெற்ற அணிவகுப்பின் போது தலைமை ஏற்றதோடு அங்கு இடம் பெற்ற போராட்டத்தின் காரணமாக ஆங்கிலேயர்களால் தாக்கப்பட்டு பலத்த காயத்தோடு மண்ணில் விழுந்த போதும் தன் இந்திய நாட்டு தேசிய கொடியை தரையில் விழாமல் பற்றிய வண்ணமே கீழே விழுந்தார்.

தனது உயிரையும் துச்சமாக கருதி தனது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மாமனிதரே திருப்பூர் குமரன் ஆவார்.

இந்திய சுதந்திரத்தில் நேதாஜி

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சுதந்திரம் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். அதாவது “ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல” என இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியதொரு வீரராவார்.

தனது தாய் நாட்டை விட்டு தனி மனிதராக வெளியேறி பிரிதொரு நாட்டில் இந்திய தேசிய ராணுவத்தினை அமைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவரே நேதாஜி ஆவார்.

இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடிய வீரத் திருமகனாக இன்றும் போற்றப்பட்டு வருகின்றார்.

முடிவுரை

பல வீரர்களின் உயிர் தியாகங்கள் மற்றும் அர்பணிப்பின் விளைவாகவே சுதந்திரம் கிடைத்ததே தவிர சுதந்திரமானது சும்மா கிடைக்கவில்லை.

சுதந்திரமிக்க எம் இந்திய தேசத்தின் வீரர்களை போற்றுவதோடும், எம் நாட்டின் பெருமையினை உணர்ந்து செயற்படுவதும் எம் அனைவரதும் கடமையாகும்.

You May Also Like:

பெண் கல்வி மற்றும் நிதி சுதந்திரம் கட்டுரை

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் கட்டுரை