மின்சாரத்தை கடத்தும் அலோகம் எது

minsarathai kadathum alogam

இந்த உலகம் உயிரினங்கள், காடுகள், மரங்கள் போன்றவற்றினால் உருவாகியுள்ளது. ஆனால் விஞ்ஞான ரீதியாக இந்த உலகம் திண்மம், திரவம், வாயு எனும் மூன்றினாலும் ஆக்கப்பட்டுள்ளது.

இரசாயன ரீதியாக நோக்குமிடத்து பல துணிக்கைகளால் ஒவ்வொரு அணுவும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது ஆய்வு ரீதியாக உண்மை என விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டுள்ளது.

அணுக்கள் புரோத்தன், நியூத்திரன், இலத்திரன் எனும் மூன்று மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் மூலகங்களில் உலோகம், அலோகம், அல்லுலோகம் போன்ற வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பதிவில் நாம் மின்சாரத்தை கடத்தும் பண்புடைய அலோகம் பற்றிய விரிவான விளக்கத்தை பார்ப்போம்.

மின்கடத்திகள்

மின்னைக் கடத்தும் பண்பு கொண்ட யாவும் மின் கடத்திகள் ஆகும். பெரும்பாலான உலோகங்கள் மின்னைக் கடத்தும் பண்பினைக் கொண்டவை ஆகும்.

குறிப்பாக வெள்ளி, செம்பு, பொன், அலுமினியம், இரசம் போன்றன உலோகங்களில் கடத்தும் இயல்புகள் கொண்டவை ஆகும். ஆகையால் மின் இணைப்பிற்கு பயன்படும் மின் கம்பிகள் இவ்வகையான கடத்திகளால் ஆக்கப்படுகின்றன.

ஓம் விதி எனப்படுவது பதார்த்தங்களிடையே மின்னைக் கடத்தும் இயல்பினை விளக்குகிறது. ஓம் விதி எனப்படுவது யாதெனில் ஒரு பதார்த்தத்தின் மின்னோட்டத்திற்கும் அப்பதார்த்தத்திற்கு பிரயோகிக்கப்படும் மின்புலத்திற்கும் நேர்விகித தொடர்பு ஒன்று காணப்படுகின்றது.

அந்த நேர் விகித தொடர்பை சமனாக்குவதே மின் கடத்து திறன் என்று அழைக்கப்படுகின்றது.

கார்பன்

கார்பன் என்பது மின்னைக் கடத்தக்கூடிய அலோகம் ஆகும். கரிமம் எனப்படுவது ஒரு கனிமப் பொருள் ஆகும். இதன் வேதியல் பெயர் கார்பன் ஆகும். பண்டைய காலம் முதல் இதன் பயன்பாடு இருப்பதனால் இதனைக் கண்டுபிடித்தவர் இன்று வரை அறியப்படவில்லை.

தனித்த கரிமம் வைரம் என்றும் கூட்டுக் கரிமம் நிலக்கரி மற்றும் காரீயப் படிவுகளாகவும் இயற்கையில் காணப்படுகின்றன. இத்தகைய கார்பன் ஆனது உயிரினங்களின் ஒவ்வொரு உறுப்பிலும் காணப்படுவதோடு தாவரங்களின் ஒளித் தொகுப்பிற்கு இன்றியமையாத அம்சம் ஆகவும் காணப்படுகின்றது.

கரி, கிராபைட், வைரம், வெள்ளைக்காபன் போன்றன கார்பனின் பிற திருப்பங்கள் ஆகும்.

கார்பனின் மிகமிக உறுதியான பிறதிருப்பம் வைரம் ஆகும். இது உலகில் மிகவும் பெறுமதியானது ஆகும்.

கிராபைட் என்பது ஒரு மென்மையான கரிமம் ஆகும். கிராபைட் மின்சாரத்தைக் கடத்தும் இயல்பினைக் கொண்டுள்ளது. ஆனால் இது வெப்பத்தைக் கடத்தாது. கிராபைட் மசகுப் பொருளாகவும் வர்ண தயாரிப்பு, பென்சில் தயாரிப்பு, மின்கலங்கள், மின் சாதனங்களில் மின் வாயாக தொழிற்படுதல் போன்றவற்றுக்கு பயன்படுகிறது.

மரக்கரி என்பது மக்களின் அன்றாட விறகுத் தேவையிலும் உயர் வெற்றிட வெளியை உண்டாக்குவதற்கும் பயன்படுகிறது. சில வளிமங்களைப் பிரித்தெடுக்கவும் பயன்படுகிறது.

கழிவு நீர் சுத்திகரிப்பு, கனிமங்களிலிருந்து உலோகத்தை பிரித்தெடுப்பு, இசைத்தட்டு, தார்ப்பாய், காபன் தாள் போன்றவற்றின் தயாரிப்பு போன்றவற்றுக்கும் பெரிதும் துணை புரிகின்றது.

நிலக்கரி எனப்படுவது முழுமையான கார்பன் மூலக்கூறுகளால் மட்டும் ஆக்கப்படாது மேலும் வேறு சில மூலக்கூறுகளாலும் சேர்த்து ஆக்கப்பட்டுள்ளது.

இது எரிபொருட் தேவைக்காகவும் மின்சார உற்பத்திக்காகவும் பாரிய அளவில் பயன்படுகிறது.

அதுமட்டுமல்லாது கார்பன் மூலம் மருந்து மூலப்பொருட்கள், வெடிபொருட்கள், நறுமணப் பொருட்கள், இனிப்பு பொருட்கள் போன்றன தயாரிக்க பயன்படுகின்றன.

You May Also Like:

ஐம்பொன் யாவை

புதைபடிவ எரிபொருள் என்றால் என்ன