ஹரா பட முதல் நாள் வசூல்!

தமிழ் சினிமாவில் வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் தான் மைக் மோகன்.

கன்னட திரையுலகில் தான் முதலில் அறிமுகமானார். பாலுமகேந்திராவின் கோகிலா திரைபடத்தின் மூலம் அறிமுகமானார். இப் படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருப்பார்.

இதனால் இவரை கோகிலா மோகன் என்று அனைவரும் அழைக்க ஆரம்பித்தனர். 1980 இல் தமிழில் மூடு பனி படத்தின் மூலம் அறிமுகமனர். இதன் பின் 80 களில் வெள்ளிவிழா நாயகன் என்று அழைக்கபட்டார்.

பின் நெஞ்சத்தை கிள்ளாதே எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக திகழ்ந்தார். மற்றும் பயணங்கள் முடிவதில்லை என்ற படத்திற்கும் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வாங்கியுள்ளார். இவர் இறுதியாக சுட்ட பழம் படியான தான் நடித்துள்ளார்.

தற்போது 14 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவிற்குள் காலடி வைத்ததுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் கோட் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவரை விஜய்யின் லியோ படத்தில் நடிக்க கேட்டதற்கு மறுத்து விட்டார். இருப்பினும் தற்போது கோட் படத்தில் வில்லனாக நடுத்துள்ளார்.

இவ்வாறு இருக்க தற்போது இவர் நடிப்பில் ஹரா படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்குயுள்ளார். இந்த படத்தில் இவருடன் இணனைந்து யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மகளாக நடித்த அனித்ரா நாயர், வனிதா விஜயகுமார், மைம் கோபி என பலர் நடித்துள்ளனர்.

கோயம்புத்தூரில் மனைவி மற்றும் மகளுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ராம் (மோகன்). திடீரென ஒருநாள் மகள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளவே, குடும்பம் நிலைகுலைகிறது.

இதன்பிறகு இப்ராஹீம் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு தனது மகளின் தற்கொலைக்கு காரணம் யார் என்ற விசாரணையில் இறங்குகிறார்.

இன்னொருபுறம் ஹீரோவால் ஒருகாலத்தில் பாதிக்கப்பட்டு வேலை, குடும்பத்தை இழந்த முன்னாள் போலீஸ்காரர் ஒருவர் தலைமையிலான ஆட்கள் இவரை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர்.

தனது மகளின் மரணத்துக்கான காரணம் குறித்த தேடலின்போது ஹீரோ செய்யும் சில வேலைகள் போலீஸின் கவனத்தை இவரை நோக்கி கொண்டு வந்துவிடுகின்றன. ஹீரோவின் மகளின் மரணத்துக்கு நியாயம் கிடைத்ததா, இறுதியில் என்னவானது என்பதே ‘ஹரா’ படத்தின் திரைக்கதை.

இவர் எதற்கு நடித்தார் என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு படம் இருந்துள்ளது. இவரின் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றது. இந்த படம் முதல் நாள் வெறும் 50 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது.

more news