சூரியின் செயலால் பதறி ஓடும் தயாரிப்பாளர்கள்!

சூரி காமெடியானாக இருந்து ரசிகர்கள் மூக்கு மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுமளவிற்கு கீரோவாக மாறி இருக்கின்றார். வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பிறகு இவருடைய பெயர் பரோட்டா சூரி என்று மாறிவிட்டது.

சூரி கதாநாயகனாக மாறி இருப்பது யாருமே எதிர் பார்க்காத விடயமே. விடுதலை படத்தில் இவரின் நடிப்பு மிகவும் கச்சிதமாக இருந்தது அனைவரையும் இது சூரியா? என்று ஆச்சரியபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் விடுதலை 2, கருடன் மற்றும் கொட்டாகாளி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

தமிழ் சினிமா வரலாற்றிலே விக்ரமிக்கு அடுத்ததாக ஒரு கதாபாத்திரத்திற்காக தன் உடலையே வருத்தும் நபர் என்றால் அது சூரி தான். கொட்டாகாளி படத்திற்காக தன் தொண்டையை தொண்டை கட்டியது போல மாற்றி கொண்டார். அது மிகவும் ஆபத்தானது என்று வைத்தியர்கள் கூறியும் தன்னை மாற்றி கொண்டார்.

இந்நிலையில் தயாரிப்பாளர்களிடம் சம்பளமாக 8 கோடி சம்பளம் கேட்டுள்ளார் இதை கேட்ட தயாரிப்பாளர்கள் பதறி ஓடுகின்றார்கள்.

More News