வட கொரியாவிற்கு பயணித்த சீன உயர் அதிகாரி

சீனா

சீன உயர் அதிகாரிகளுள் ஒருவரான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய அதிகாரியாக கருதப்படும் ஜாவோ லொஜி (தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர்) வடகொரியாவிற்கு வந்தடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி வடகொரியாவிற்கு வருகை தந்த அவர் தங்களுடைய ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தியினை வெளியிட்டுள்ளது.

இதன்படி வடகொரிய பிரதிநிதியான Choe Ryong Hae ஐ சந்தித்து பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டதோடு கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம் என பல்வேறு பகுதிகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையை மேற்கொண்டார் எனவும் தெரரிவிக்கப்படுகின்றது.

ஜாவோ லொஜியின் வட கொரிய பயணமானது கொரோனா வைரஸ் தொடக்கம் சீன பொலிட் பீரோ நிலைக்குழு உறுப்பினர் சம்பந்தப்பட்டது வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் சீன தலைவரான ஜி ஜின்பிங் தலமையில் அமைந்துள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழுவான பொலிட்பீரோவின் ஏழு உறுப்பினர்களுள் ஜாவோவும் ஒருவராகவே கருதப்படுகிறார்.

இதன்படி சீன உயரதிகாரியான ஜாவோ லொஜி ஓர் ஒத்துழைப்பிற்கான சிறந்த பேச்சுவார்த்தையினையே மேற்கொண்டுள்ளார் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.