தளபதி விஜயி நடிப்பில் வெளியாகவுள்ள கோட் படத்தின் விசில் போடு பாடல் வெளியானது.
தளபதியின் குரலில் பாடிய பாடலை முதல் நாள் 7 மில்லியன் ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாது யூடியுப்பில் இப் பாடல் 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் ஐ பெற்றுள்ளது. இப் பாடலுக்கு யுவன் இசையமைத்துள்ளார்.
விசில் போடு பாடல் வெளியான நாள் முதல் இடத்தை பிடித்த பாடலாகவும் இது அமைந்துள்ளது. அன்று இரண்டாம் இடத்த பிடித்த பாடல் பேபி மான்ஸ்டர் ஆகும்.
இப் பாடலை 3 மில்லியன் பார்வையாளர்கள் மட்டுமே பார்வையிட்டுள்ளனர். கிட்டதட்ட இரு பாடல்களுக்கும் இடையில் இரு மடங்கிற்கும் அதிகமான வேறுபாடு உள்ளது.
விசில் போடு பாடல் இத்தனை மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்தாலும் அப் பாடலுக்கு எதிர்மறையான கருத்துக்களே அதிகமாக வந்து கொண்டிருக்கின்றது.
இப் பாடலில் அரசியல் பற்றிய மறைமுகமான கருத்துக்கள் உள்ளன. இப் பாடலின் எதிர்ப்பிற்கு இதுவே காரணமாகும். சில பாடல் வரிகள் மதுபான பாவனை மற்றும் நாட்டில் கலவரத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
இப்படாலுக்கு அனிருத் இசையமைத்திருக்கலாம் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
யுவனின் இசை நன்றாகவே இல்லை விஜய்க்கு எப்போதுமே அனிருத் மட்டுமே நன்றாக இசையமைப்பார் என்று கூறி யுவனை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
அனிருத், யுவன் இருவரையும் வைத்து சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
இந் நிலையில் திடீரென யுவன் இன்ஸ்டாக்கிராம் இல் இருந்து விலகி விட்டார். இதனால் அதிர்ந்து போன ரசிகர்கள் தாம் இவ்வாறு செய்தமையால் தான் அவர் விலகி விட்டார் என்று நினைத்து விட்டனர்.
இதனால் அனைத்து யுவன் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் மன்னிப்பு கேட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக “ஹலோ மக்களே உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி, நான் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகவில்லை அது வெறும் டெக்னிக்கல் இஸூ , அதை சரி செய்ய முயற்சித்து கொண்டு இருக்கிறேன். நான் மீண்டும் இன்ஸ்டாகிராமிற்கு விரைவில் வருவேன். நன்றி ” என அவருடைய எஸ் தளத்தில் பதிவிட்டுருக்கிறார்.
இதை கேட்ட அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் அவருடைய வருகையை எண்ணி காத்திருக்கின்றனர். எனினும் சில ரசிகர்கள் அவருடைய அடுத்த பாடல் மிகவும் வெறித்தனமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.