தமது பிரிவை உறுதிபடுத்திய ஜி. வி பிரகாஷ் -சைந்தவி!

சினிமாவில் காதல் திருமணம் பின்னர் விவாகரத்து இதோன்றும் சினிமாவுக்கு புதிது இல்லை. தற்போது இளம் ஜோடிகள் வரிசையில் விவாகரத்து முடிவு எடுத்து வருகின்றனர். அதில் முதலாவதாக நாக சைதன்யா -சமந்தா ஜோடி தான். இவர்கள் 2017 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பின் 2023 ம் ஆண்டு விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர். அடுத்து தனுஷ்- ஐஸ்வர்யா ஜோடி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ். இவர்கள் விவாகரத்து செய்து கொள்வது ரசிகர்களை மட்டுமல்லாது ஓட்டு மொத்த சினிமாவையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர்களுக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர். அவர்களுடைய நலனைகூட இவர்கள் கருத்தில் கொள்ளாமல் இவ்வாறு விவாகரத்து செய்கின்றனர் என்று அனைவரும் கூறி வருகின்றனர். இவர்களை சேர்த்து வைப்பதற்கு ஐஸ்வர்யாவின் தந்தை ரஜனி உட்பட பலரும் முயற்சி செய்தும் அவர்கள் விவகாரத்தில் உறுதியாக நிக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜனியின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகபெரிய சறுக்கல் என்றால் அது ஐஸ்வர்யாவின் விவாகரத்து விடயம் தான்.

இவ்வாறு இருக்க அடுத்த புது ஜோடி முளைத்து விட்டது. அது நம்ம ஜி. வி பிரகாஷ் -சைந்தவி ஜோடி தான். ஜி. வி பிரகாஷ் இசையமைப்பாளர், நடிகர், பாடகர்,பாடலாசிரியர் என சினிமாவில் பணி புரிந்து வருகின்றார்.

இவர் ஏ. ஆர் ரகுமானின் சகோதரியின் மகன் ஆவார். இவருடைய மனைவி சைந்தவியும் ஒரு பாடகியாவார். தற்போது இவர் ஜி தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமபா நிகழ்ச்சியில் நடுவராக இருக்கின்றார்.

இருவரும் ஒரே பள்ளியில் படித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2013 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் 7 வருடங்கள் கடந்தநிலையில் 2020 ம் ஆண்டு பெண் குழந்தையை பெற்று கொண்டனர்.

தற்போது இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். தாம் இருவரும் தமது 11 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

ஜிவி பிரகாஷ், நானும், சைந்தவியும் 11 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய முடிவு செய்திருக்கிறோம். ஒருவர் மீது ஒருவர் நாங்கள் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும்.

இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமான காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும், ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி என சமூக வலைத்தளங்களில் தெரிவித்து உள்ளார்.

more news