வரலட்சுமியின் கல்யாணத்தை வெளிநாட்டில் நடத்தும் சரத்குமார்!

நடிகர் சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்த மனைவி தான் வரலட்சுமி. இவர் தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் ஹீரோயின் ஆக நடிப்பதற்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் வில்லியாக நடிக்க ஆரம்பித்தார். தளபதி விஜய் நடித்த சர்க்கார் படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார்.

நடிகை வரலட்சுமி, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் ஒரு மகன் இருக்கின்றார். இவ்வாறு இருக்க ரசிகர்கள் ஏன் இவரை திருமணம் செய்கின்றீர்கள் என்று கேட்டு வருகின்றனர். வரலட்சுமியின் காதலனையும் உருவியாகேலி செய்தும் வருகின்றனர். அவர் தொழில் அதிபர் என்பதால் தான் திருமணம் செய்கின்றீர்களா? என்றும் கேட்டு வருகின்றனர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக இவர் நான் திருமணம் செய்ய போகின்றவர் எனக்கு பிடித்தால் போதும் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு இருக்க திருமண அழைப்பிதல்களை அனைவருக்கும் வழங்கி வருகின்றனர். ஸ்டாரலின், ரஜனி, கமல்ஹாசன், பிரபு, பாலா போன்றோருக்கும் அழைப்பிதல் வழங்கபட்டுள்ளது. மற்றும் நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கும் நேரில் சென்று அழைப்பிதல் வைக்கபட்டுள்ளது. இதனால் வரலட்சுமி தனது முதல் பட இயக்குநனரை மறக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

இவர்கள் இருவரின் திருமணத்தை தாய்லாந்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்த உள்ளதாகவும் அதற்கான வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

more news