காஞ்சனா 4 குறித்து வெளியான அனைத்து தகவலும் பொய்யானது!- லரான்ஸின் பதிவு!

ராகவா லரான்ஸின் நடிப்பில் காஞ்சனா வெளியாகி தொடர்ச்சியாக 3 பாகங்களை கடந்துள்ளது. இவ் மூன்று பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

சுந்தர் சியின் அரண்மனை தொடர் காட்சி படங்களில் அரண்மனை பாகம் 2,3 வெற்றியை தழுவவில்லை. அரண்மனை படத்தோடு நிறுத்தியிருந்தால் அதற்கான மதிப்பவது கிடைத்திருக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர். இவ்வாறு இருக்க தற்போது அரண்மனை 4 வெளியாகி 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அரண்மனை 4 இந்தளவிற்கு வெற்றி பெரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆதி தன்னுடைய இசையால் மிரட்டியிருப்பார்.

இவ்வாறு பேயை வைத்து எடுக்கும் படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெரும் குறிப்பாக குடும்ப ஆடியன்ஸ் ஐ கவரும் வகையில் இருக்கும். ராகவா லரான்ஸின் நடிப்பில் வெளியான காஞ்சனா ,1,2,3 ஆகிய 3 பாகங்களுமே பெரும் வெற்றியை பெற்றது.

தற்போது காஞ்சனா 4 இற்கான ஆடிசன் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. இவ்வாறு இருக்க சீதாராமன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த மிருணால் தாகூர் ஹீரோயின் ஆக நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்தது.

மிருணால் தாகூர் இனிய இருமலர்கள் எனும் சீரியலில் நடித்து அதன் பின்னரே சினிமாவிற்கு வந்தார். அதில் அவர் அம்முவாக நடித்திருப்பார். இப்போது வரைக்கும் இவர் அனைவருக்கும் அம்முவாகதான் தெரிக்கின்றார்.

இவ்வாறு இருக்க தற்போது ராகவா லாரன்ஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், காஞ்சனா 4 பற்றி பல வதந்திகள் பரவி வருகின்றது. அது எதுவும் உண்மை இல்லை. இப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். அவர் ஹீரோயின் பற்றி தான் கூறியுள்ளார். என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

more news