பிக் போஸ் சீசன் 4 மூலம் ரசிகர்கள் மத்தியில் இயடம் பிடித்தவர் தான் ரியோ ராஜ். ரியோ சமீபத்தில் நடித்த படமான ஜோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்திருந்தனர்.
ரியோவின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது என்று ரசிகர்கள் கூறினர். ஒரு சிலர் தமது பள்ளி பருவத்தை நினைவு படுத்துவதாக இருப்பதாகவும் கூறினர். இப் படம் வசூலிலும் பிச்சு உதறியது.
நிஜ வாழ்க்கையில் ஒரு காதல் ஜோடி எதிர் கொள்ளும் பிரச்சினை பற்றி படம் அமைந்திருந்தது. இப் படத்தை பார்த்து கண்களில் கண்ணீர் வராதவர்களே இல்லை.
இப் படத்தை பார்த்த ரியோவின் மனைவி அழுகின்ற காட்சிகளும் அவரை ரியோ சமாதான படுத்தும் காட்சிகளும் இணையத்தில் வைரல் ஆகி வந்தன.
தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்க உள்ளார்.
இந்த சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இந்த படம் அமையும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இப் படம் எப்படியும் இந்த வருட இறுதியில் வெளியாகி வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்பகின்றது. ரியோ, மாளவிகா மீண்டும் இணைவாதல் இப் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.