தனுஷ் மகன் யாத்ராவின் புள்ளியா?-புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?

நடிகர் தனுஷ் தமிழ் சினிநமவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ்வதாக முடிவு எடுத்து விட்டனர். திருமணமாகி 20 வருடங்கள் கழிந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக முடிவு எடுத்து விட்டனர்.

அவர்களுடைய மகன்களிடம் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பற்றிய கேட்ட போது அவர்கள் மட்டும் தமது அம்மா,அப்பவோடு மகிழ்ச்சியாக இருக்கின்றனர் நாங்கள் மட்டும் ஒருவரோடு இருக்க வேண்டுமா? என்று கவலையோடு தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் ராயன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பேசியிருப்பார்.

தனுஷ் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா பொம்பளையா? என பலர் பேசும் அளவுக்கு வாழலாமா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் விவாகரத்து முடிவை விடுத்து ஒன்றாக இணைந்து வாழுங்கள்.

ரஜனி சார் என்னவொறு மனிதர்,அவருடைய மனதை கஷ்ட படுத்தலாமா? எனவும் கூறியுள்ளார். ரஜனி சார் போன்ற மாமனிதனுக்காக நீங்கள் சேர்ந்து வாழவேண்டும் என்றும் கூறியுள்ளார். இவர்கள் தமிழ் பண்பாட்டிற்கே துரோகம் செய்கின்றனர் என்றும் கூறினார்.

இவ்வாறு இவருடைய வாழ்க்கை போனாலும் வருடைய சினிமா வாழ்க்கை நன்றாகவே போகின்றது. இவரின் இயக்கத்தில் இவரே நாயகனாக நடித்த ராயன் படம் படபிடிப்புகள் முடிந்த நிலையில் ரிலீஸ் ஆக இருக்கின்றது.

தற்போது இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் குபேரா படத்தில் நடித்து வருகின்றார்.

இவ்வாறு இருக்க 12 ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தனுஷ் மகன் யாத்ரா 600 ற் கு 569 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

தமிழ் மொழிப்பாடத்தில் 98 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 92, கணக்கு 99, பிசிக்ஸ் 91, கேமிஸ்ட்ரி 92, பயாலஜியில் 97 மதிப்பெண் பெற்று 600க்கு 569 மதிப்பெண் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இவ்வாறே சூர்யா, ஜோதிகவின் மகள் தியாவும் 600 ற்கு 581 புள்ளிகளை பெற்றுள்ளார்.