அஜித்திற்காக போலீஸிடம் சென்று மாட்டிக்கொண்ட கவின்!

தமிழ் சினிமாவின் ஆட்டநாயகன் அஜித் தற்பொழுது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் பலரும் அஜித் ரசிகன் என்று கூறுகின்றனர்.

அவ்வாறுதான் கவினும் நான் அஜித் ரசிகன் இல்ல அஜித் வெறியன் என்று கூறுவர்.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இருவரும் மாபெரும் நடிகர்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் தான் போட்டி என்று கூட சொல்லலாம்.

இவர்களின் ரசிகர்கள் தமக்குள்ளே சண்டை பிடுத்து வருகின்றனர்.

இவர்கள் தாம் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறியும் அவர்கள் கேட்பதே இல்லை.

இதனால் தான் அஜித் நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொள்வதில்லை.

இவ்வாறு இருக்க கவின் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் பற்றி ஒரு சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.

கவின் நடித்த டாடா மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் இவர் நடிக்கும் ஸ்டார் படத்தின் டிரெயிலர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டிரெயிலர் பார்த்தவர்கள் படம் வெற்றியை கொடுக்கும் என்று கூறுகின்றனர்.

இவ்வாறு இருக்க கவின் நான் அஜித் ரசிகன் என்றும் ஒருநாள் அஜித், விஜய் இருவரோட படமும் ஒரே நாள் வெளியானதால் அங்கு இரு ரசிகர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது அங்கு போலீஸ் வர அவர்களுக்கும் எங்களுக்கும் சண்டை ஏற்பட்டு விட்டது.

அங்கு வந்த போலீஸ் எல்லாரையும் அடிக்கும் போது நௌம் அந்த கூட்டத்தில் அடி வாங்கினேன் என்று கூறியிருந்தார்.

More News